Published:Updated:

`பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து!’ - மனித உரிமை ஆணைய நீதிபதி வருத்தம்

ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன்
News
ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன்

`பள்ளி கழிப்பறைச் சுவர், அடித்தளம் அமைக்கப்படாமல் கட்டப்பட்டதே விபத்து ஏற்படக் காரணமாகிவிட்டது’ என்று சம்பவ இடத்தை நேரில் பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி தகவல்.

நெல்லை டவுன் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17-ம் தேதி இடைவேளை நேரத்தில் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலியானார்கள். நான்கு பேர் காயமடைந்தனர். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

மாணவர்கள் உயிரிழந்த பள்ளி
மாணவர்கள் உயிரிழந்த பள்ளி

அதைத் தொடர்ந்து நெல்லையில் விபத்து ஏற்பட்ட பள்ளியில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான ஓய்வுபெற்ற நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் இன்று நேரில் ஆய்வுசெய்து விசாரணையைத் தொடங்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பள்ளியில் சுவர் இடிந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை துணை ஆணையாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனித உரிமை ஆணைய நீதிபதி கேட்டறிந்தார். அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினார்.

மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

பின்னர் விபத்து நடந்த பள்ளிக்கு நேரில் சென்ற அவரைப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சந்தித்தனர். அத்துடன், விபத்தில் தங்கள் குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோரும் நீதிபதியைச் சந்தித்து, இந்த வழக்கு தொடர்பாக விரைவாக விசாரித்து தவறு செய்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினரான நீதிபதி ஜெயச்சந்திரன், ``நெல்லையில் பள்ளிச் சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு மாநில மனித உரிமை ஆணையம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என விரும்புகிறோம்.

மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்

இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர், தவறு செய்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் இந்த விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கையைக் கேட்டிருக்கிறோம்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தபோது, இந்த வழக்கு தொடர்பாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நான்கு பேர் பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள். கட்டட இடிபாடுகளில் மாணவர்கள் சிக்கியிருந்தபோது அவர்களை மீட்க ஆசிரியர்கள் தயக்கம் காட்டியதாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த பள்ளியில் ஆய்வு
சம்பவம் நடந்த பள்ளியில் ஆய்வு

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நடந்த சம்பவத்துக்கு வருத்தம்கூடத் தெரிவிக்காத பள்ளி நிர்வாகத்துக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, பள்ளி விபத்து தொடர்பாக போலீஸாரும் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தொழிநுட்பரீதியிலான விசாரணையை போலீஸார் தொடங்கியதுடன், மாணவர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது.