Published:Updated:

அருப்புக்கோட்டை: ஊரடங்கில் வேலையில்லை; சிலை கடத்திய நபர்கள் - சிக்கியது எப்படி?

நரிக்குடி காவல் நிலையம்

அருப்புக்கோட்டையில் வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த பழமையான 4 ஐம்பொன் சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அருப்புக்கோட்டை: ஊரடங்கில் வேலையில்லை; சிலை கடத்திய நபர்கள் - சிக்கியது எப்படி?

அருப்புக்கோட்டையில் வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த பழமையான 4 ஐம்பொன் சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Published:Updated:
நரிக்குடி காவல் நிலையம்

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் போலீஸார் பல இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், உரிய ஆவணங்களுடன் இ-பதிவு சான்றிதழ் பெற்றவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதி அட்டை பெற்றவர்கள், பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். காரணமின்றி சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் வாகனத் தணிக்கையில் நிறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள்
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, கமுதி - திருச்சுழி சாலை அபிராமம் சந்திப்பில் வீரசோழன் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக திருச்சுழியை நோக்கி பைக்கில் வந்த இரண்டு பேர் போலீஸாரைப் பார்த்ததும், தப்பியோட முயன்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனே, அவர்களை மடக்கிய போலீஸார், அவர்கள் வைத்திருந்த சாகுப்பையை சோதனையிட்டனர். அதில், ஐம்பொன்னால் ஆன, சிறிய அம்மன் சிலை ஒன்று இருந்தது. இருவரையும் சிலையோடு நரிக்குடி காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் இருவரும் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் பழனிசாமி , கூறிப்பாண்டி என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில்,``நாங்க கட்டட வேலை செய்யுறோம். கட்டிடம் கட்டுவதற்காக குழி தோண்டியபோது இந்த அம்மன் சிலை எங்களுக்குக் கிடைத்தது.

நரிக்குடி காவல் நிலையம்
நரிக்குடி காவல் நிலையம்

லாக்டவுன் என்பதால எங்களுக்குத் தொழில் இல்ல. கையில காசும் இல்ல. செலவுக்காக இந்த சிலையை நகைப்பட்டறையில் அடகு வைக்கலாம்னு எடுத்துட்டுப் போனோம். இதே போல 3 சிலைகள் மினாக்குளத்தை சேர்ந்த எங்களோட நண்பர் சின்னையாவோட வீட்டுல வச்சிருக்கோம்” என்றனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், நரிக்குடி போலீஸார், மினாக்குளத்திலுள்ள சின்னையாவின் வீட்டில் சோதனை நடத்தினர்.

அங்கு புத்தர் சிலை, விநாயகர் சிலை மற்றும் பெரிய அம்மன் சிலை என மூன்று சிலைகளை மீட்டனர். சிலைகளை பதுக்கியதாக சின்னையா மற்றும் பழனிமுருகன் என்ற மேலும் இருவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்ததுடன் சிறையில் அடைத்தனர். போலீஸார் தரப்பில் பேசினோம், ``அந்த நாலு சிலைகளைப் பார்க்கும்போது குழி தோண்டியபோது கிடைத்தது போலத் தெரியவில்லை. நான்கு சிலைகளும் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளன.

நரிக்குடி காவல் நிலையம்
நரிக்குடி காவல் நிலையம்

அவர்கள் சொல்வது எதுவுமே நம்பும்படியாக இல்லை. கோயில்களில் இருந்த சிலைகளைக் கடத்தி பதுக்கி வைத்திருந்தார்களா? சிலை விற்பனை செய்யும் வியாபாரியிடம் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றார்களா? இவர்களின் பின்னால் இருக்கும் சிலைக்கடத்தல் கும்பலைப் பற்றியும் விசாரனை செய்து வருகிறோம்” என்றனர். ஊரடங்கு நேரத்திலும் தந்திரமாக சிலை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.