Published:Updated:

2K kids:ஸ்டீரியோடைப் செய்வதை நிறுத்துங்கள்!

2K kids
பிரீமியம் ஸ்டோரி
2K kids

விபா தோகா ஜெயின்

2K kids:ஸ்டீரியோடைப் செய்வதை நிறுத்துங்கள்!

விபா தோகா ஜெயின்

Published:Updated:
2K kids
பிரீமியம் ஸ்டோரி
2K kids
‘ஸ்டீரியோடைப்’ என்பது ‘இது இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று சமூகம் வகுத்து வைத்துள்ள பொதுவான, பழைய நம்பிக்கை; மாறாத கருத்துரு.

உதாரணமாக, `இளம் பெண்களுக்கு பேபி பிங்க் பிடிக்கும்' என்பார்கள். `ஆண்கள் அழக் கூடாது' என்பார்கள். இப்படி, நம்மைச் சுற்றி கட்டமைக்கப் பட்டுள்ள ஸ்டீரியோடைப் வட்டத்துக்குள்தான் நம்மில் பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படி என்னைச் சுற்றிய ஸ்டீரியோடைப்பை நான் உடைத்த தருணம், வாழ்க்கையை முன்பைவிட தன்னம்பிக்கையுடன் என்னை பார்க்க வைத்தது.

வட இந்தியரான நான், ஏழாம் வகுப்பில் தமிழை எனது இரண்டாவது மொழிப்பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். ‘வட இந்தியரால் கடினமான மொழியான தமிழைப் படிக்க முடியாது’ என்று என்னை ஸ்டீரியோடைப் செய்தார்கள். அதன் விளைவாக அந்தப் பாடத்தில் நான் தோல்வியடைந்தேன், தோல்வியடைந் தேன், தோல்வியடைந்தேன். என்னிடம் அனுப்பப்பட்ட அந்த எதிர்மறையான கருத்துகளை, ஒரு கட்டத்தில் நான் புறக்கணிக்க ஆரம்பித்தேன். இந்திப் பெண் என்றாலும் என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்துப் படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழில் தேறினேன்.

2K kids:ஸ்டீரியோடைப் செய்வதை நிறுத்துங்கள்!

எல்லோரும் ஆச்சர்யப்படும் விதமாக, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழில் 93 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தேன். எந்தவொரு ஸ்டீரியோடிபிக்கல் கருத்தையும்விட, `என்னைத்தான் முதலில் நம்ப வேண்டும்' என்று நான் புரிந்துகொள்ள ஆரம்பித்த தருணம் அதுதான்.

பொதுவாக, பெண்கள் தனியாகப் பயணம் செய்யக் கூடாது என்பது இங்கிருக்கும் முக்கியமான பிரச்னை. ஆனால், இளைஞர்களுக்கு தலைமைப் பண்பை வளர்க்கும் ‘ஆசியா வேர்ல்டு மாடல் யுனைடெட் நேஷன்ஸ்’ போட்டியில் பங்கேற்க, இந்தோனேசியாவின் பாலிக்கு நான் தனியாகப் பறந்தபோது எனக்கு 19 வயது. என் பெற்றோர் எனக்கு ஆதரவாக இருக்கும்போது, உலகம் என்ன சொல்லும் என்ற கவலை எனக்கெதற்கு?

ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்திருந்த அந்தப் போட்டியில், தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஐந்து பேரில் நானும் ஒருவராக பாலி சென்றது உற்சாக மான அனுபவம். இன்னொரு பக்கம், ‘பொண்ணு தனியா டிராவல் பண்ணக்கூடாது’ என்பதை உடைத்த ‘பிரேக் தி ஸ்டீரியோடைப்’ தைரியமும் எனக்கு அப்போது கிடைத்தது. என்றாலும், அந்தத் தைரியமும் வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே?!

நம் அனைவரின் வாழ்க்கையிலும் பார்வையாளர்களாக இருக்கிறோம். ‘மீடியா வேலை எல்லாம் பொண்ணுக்கு செட் ஆகாது’, ‘ஆம்பளப் பசங்களுக்கு ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ்லாம் சரி வருமா?’ என்று இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் நம் கருத்துகளை அனுப்புவதில் மும்முரமாக இருக்கிறோம்.

ஆனால், ஆண் - பெண் என்ற பணியிட ஸ்டீரியோடைப்களை உடைத்த ஆளுமைகள்... நமக்குப் பதில்களாக அங்கே இருக்கிறார்கள். இந்திய ஃபேஷன் துறையின் ஆளுமை ஆண்களாக ஜொலிக் கிறார்கள் சபியா சாச்சியும், மனிஷ் மல்ஹோத்ராவும். உண்மை யில், குத்துச்சண்டை வீரர் மேரி கோமின் வீரியமான பன்ச் விழுந்தது, ‘பொண் ணுங்க விளையாடப் போகலாமா?’ என்ற இந்திய மனநிலையில்தான். மணக்க மணக்க சமைக்கிறார்கள் செஃப் தாமுவும் வெங்கடேஷ் பட்டும். ஸ்டீரியோடைப் களை தாண்டி தங்கள் கரியரைத் தேர்ந்தெடுத்த வெற்றியாளர்கள் இவர்கள்.

நம் வீட்டுக் குழந்தைகள் சமூக வழக்கத்திலிருந்து மாறிய ஒரு விருப்பத்தை சொல்லும்போது, `தம்ப்ஸ் அப்' சொல்வோம், ஆதரவாக ஒரு புன்னகை அளிப்போம். அது அவர்களுக்கு இந்த உலகை வெல்லும் தன்னம்பிக் கையை அளிக்கும்.

‘இப்படியெல்லாம், இதை யெல்லாம் பண்ணக் கூடாது’ என்று பழைமையான கருத்துகளால் நெகட்டி விட்டியை உருவாக்கிக் கொண்டே இருப்பவர்களி டம் உறக்கச் சொல்வோம்... `ஸ்டாப் ஸ்டீரியோடைப்பிங்'.