Published:Updated:

'இளையராஜாவுடன் வளர்ந்த, இளையராஜாவால் வளர்ந்தோர் நினைத்தால்..?' - சுகா நம்பிக்கை

இளையராஜா
இளையராஜா

இன்றைக்கு பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் மூடிக்கிடக்கிறது. மத்திய மந்திரிகளே இளையராஜாவைப் பார்ப்பதற்காக பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்து அவரது அறையில் அமர்ந்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தமிழ்த் திரைப்படங்களிலும் காண்பித்தார்கள். இளையராஜாவின் நண்பரான இயக்குநர் பாரதிராஜா 'நிழல்கள்' திரைப்படத்தில் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் நடந்த பாடல் பதிவைப் படமாக்கினார்.

'வாத்தியார்' பாலுமகேந்திரா 'ரெட்டைவால் குருவி' திரைப்படத்தில் இளையராஜாவின் கம்போஸிங் அறையைப் படமாக்கிப் பதிவுசெய்து மகிழ்ந்தார்.

பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் தனது 'சாதனை' திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஒரு திரைப்பட இயக்குநராக இளையராஜாவுடன் பாடல் கம்போஸிங்கில் பங்குபெறச் செய்தார்.

கே.பாலச்சந்தர் அவர் பங்குக்கு 'புதுப் புது அர்த்தங்கள்' திரைப்படத்தில் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தைப் படமாக்கினார். இளையராஜாவின் தீவிர ரசிகரான கமல்ஹாசனோ ஒரு படி மேலே போய் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தனது 'ராஜபார்வை' திரைப்படத்தின் டைட்டில்ஸ் முழுவதும் காட்டியதோடு அல்லாமல், தானே இசைக்குழுவினருடன் அமர்ந்து வயலின் இசைத்தார். இப்படி பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துடன் தம்மைத் தொடர்புபடுத்தி மகிழ்ந்தார்கள், நம் திரைக்கலைஞர்கள்.

இன்றைக்கு பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் மூடிக்கிடக்கிறது. மத்திய மந்திரிகளே இளையராஜாவைப் பார்ப்பதற்காக பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்து அவரது அறையில் அமர்ந்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் யாரிடமும் உதவி கேட்காத இளையராஜா சட்டப்படி, காவல்துறையை நாடியிருக்கிறார்.

இளையராஜா
இளையராஜா

இந்த நேரத்தில் இப்படி ஒப்பிடாமல் இருக்க இயலவில்லை. இந்த கோவிட் காலத்தில் அடைந்துகிடக்கும் கோடிக்கணக்கான மனிதர்களின் மனதுக்குப் பெரிய ஆறுதலாக இருக்கும் இளையராஜாவைப் போன்ற ஒரு கலைஞர் மேற்கு வங்கத்திலோ, கேரளத்திலோ பிறந்திருந்தால் இந்நேரம் இந்த ஒலிப்பதிவுக் கூடம், ஒரு கலைக்கூடம் என்பதை உணர்ந்து, அதை அருங்காட்சியகமாக மாற்றி, அரசு தன்னுடைமையாக்கி, அந்த ஒப்பற்ற கலைஞனுக்கு வழங்கி கௌரவப்படுத்தியிருக்கும்.

தான் இசையமைத்த ஆயிரம் படங்களில், பத்தாயிரம் பாடல்களில் பெரும்பாலானவற்றை இளையராஜா பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில்தான் உருவாக்கியிருக்கிறார்.

இளையராஜாவுடன் வளர்ந்த, இளையராஜாவால் வளர்ந்த எண்ணிலடங்கா கலைஞர்கள் நினைத்தால் அரசாங்கத்தை அணுகி 'தமிழர்களுக்கும் கலைஞர்களை கௌரவிக்கத் தெரியும்' என மேற்கு வங்கத்துக்கும் கேரளத்துக்கும் சவால் விடலாம்.

- பிரசாத் ஒலிப்பதிவு கூடம் - இளையராஜா உடனான அனுபவங்களைப் பகிர்ந்ததுடன், அந்த ஒலிப்பதிவுக் கூடத்தை நம் மனத்திரையில் பார்த்து வியக்கத்தக்க வகையில் விவரிக்கும் எழுத்தாளர் சுகாவின் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க https://bit.ly/3fD9UCl > இசையாலயம் https://bit.ly/3fD9UCl

சிறப்புச் சலுகை

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு