Election bannerElection banner
Published:Updated:

தேனி : தேர்வில் 'பிட்' அடித்ததைக் கண்டித்த ஆசிரியர் - மனமுடைந்த மாணவன் தற்கொலை

தேனி மாணவன் தற்கொலை
தேனி மாணவன் தற்கொலை ( Representational Image )

தேர்வில் பிட் அடித்ததை கண்டுபிடித்து ஆசிரியர் திட்டியதால், மனமுடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திருமலாபுரம் பெரியார் தெருவில் வசித்து வருபவர் கணேசன் (வயது37). இவரது மகன் விஜயபிரகாஷ் (வயது 16). தனது வீட்டிற்கு அருகில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் விஜயபிரகாஷ்.

 தூக்குத் தண்டனை!
தூக்குத் தண்டனை!

ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை படித்துவந்த விஜய்பிரகாஷ், பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதியளித்ததை அடுத்து, கடந்த மாதம் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்த விஜயபிரகாஷ், கடந்த செவ்வாய் கிழமை பள்ளியில் நடைபெற்ற மாதாந்திர தேர்வுக்குச் சென்றுள்ளார்.

தேனி: ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை... உருவானது நாட்டின் 51-வது புலிகள் காப்பகம்!

அந்தத் தேர்வில் பிட் (காப்பி) அடித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டுபிடித்த ஆசிரியர், சக மாணவர்கள் முன்னிலையில் விஜயபிரகாஷை, கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்தவாறு வீட்டிற்கு வந்த விஜயபிரகாஷ், அன்றைய தினம் மாலையில், மாட்டின் உடலில் தேய்க்கும் உண்ணி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வாந்தி, மயக்கம் ஏற்படவே, அதனைக் கண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடனடியாக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தேனி: `மருத்துவச் செலவுக்கு 5 லட்சம் தாங்க..!’ - துணை முதல்வரை மறித்த அ.தி.மு.க தொண்டர்

போடி அரசு மருத்துவமனையில், விஜயபிரகாஷுக்கு முதலுதவி செய்யப்பட்டு, கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த விஜயபிரகாஷ் சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, போடி நகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்வில் காப்பி அடித்ததை கண்டித்த ஆசிரியரால், மாணவன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், போடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு