Published:Updated:

2K kids: குரைச்சுட்டே இருந்த நாய், அந்தக் குழந்தை...

ஒரு மாணவியின் அனுபவம்!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு மாணவியின் அனுபவம்!

கலைவாணி.தி

2K kids: குரைச்சுட்டே இருந்த நாய், அந்தக் குழந்தை...

கலைவாணி.தி

Published:Updated:
ஒரு மாணவியின் அனுபவம்!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு மாணவியின் அனுபவம்!

கொரோனா டேட்டா பணிகளில் ஒரு மாணவியின் அனுபவம்!

கொரோனா இரண்டாம் அலையின் தொடக்கத் துல, தொற்றுப் பரவல் அதிகரிச்சுட்டு இருந்த நேரம் அது. சென்னை மாநகராட்சி சார்பா வீடு வீடாப் போய், ஒரு குடும்பத்தில் உள்ளவங்கள்ல இணை நோய்கள் உள்ளவங்க, 60 வயதுக்கு மேற்பட்டவங்க, தடுப்பூசி போட்டவங்கனு கொரோனா தொடர்பான டேட்டாவை எடுக்க, பல ஒப்பந்தப் பணியாளர்களை நியமிச்சாங்க. அதுல பலர் கல்லூரி மாணவர்கள். அப்படித்தான் நானும் அந்தப் பணியில் இணைந்தேன். ஆச்சர்யம், அதிர்ச்சி, அச்சம்னு கலவையான அந்த அனுபவத்தை தான் உங்ககிட்ட பகிர்ந்துக்கப் போறேன்.

2K kids: குரைச்சுட்டே இருந்த நாய், அந்தக் குழந்தை...

கொரோனா கிருமியா நானு?!

பணியில் முதல் நாள். வீடு வீடாகப் போய், ‘சார்...’, ‘மேம்...’னு கூப்பிட்டோம். எங்களைப் பார்த்ததுமே, ஏதோ கொரோனாவை பார்சல் பண்ணி கையோட எடுத்துட்டு வந்திருக்கிற வங்க மாதிரி வீட்டுக்காரர்கள் எல்லாம் ஜெர்க் ஆகிடுவாங்க. ‘நாலு இடத்துக்குப் போயிட்டு வர்றீங்க... கதவுக்கு வெளியவே நின்னு பேசுங்கம்மா’னு சொல்லிட்டு, அவங்க வீட்டுக்குள்ள தூரமா நின்னு பேசுவாங்க. நாங்க கேட்குற கேள்விகளுக்கு எல்லாம் சிலர் திகிலோடயே பதில் சொல்வாங்க. ஒருவழியா நாங்க கிளம்பினதும்தான் அவங்களுக்கு நிம்மதியே வரும். அதுல ஒரு வீட்டுல, நாங்க அடுத்த வீட்டுக்கு நகர்ந்ததும் அந்த வீட்டு அக்கா, நாங்க அவங்க வீட்டு வாசல்ல நின்ன இடத்துல மஞ்சள் தண்ணி கொண்டு வந்து ஊத்துனாங்க பாருங்க... இந்த உலகம் நம்மளை ஒரு கிருமியா டீல் பண்ணுதேனு சத்தம் போட்டு சிரிச்சுட்டோம்!

முதல்ல தண்ணி... அப்புறம் திகில்!

ஒரு வீட்டுல, மாஸ்க் போடாம ஒருத்தர் வந்தார். ‘சார் மாஸ்க் போட்டுக்கோங்க... உங்க பாதுகாப்புக்குத்தான் சொல்றோம்’னு சொன்னோம். ‘இருக்கட்டும்மா...’னு ரொம்ப பொறுமையா நாங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொன்னார். கடைசியா, ‘தண்ணி எதுவும் வேணுமாம்மா?’னு கேட்க, நாங்க நெகிழ்ந்துபோயிட்டோம். இவ்வளவு நல்லவரா இருக்காரேனு ஃபீல் ஆகி, ‘மற்ற வீடுகள்ல எல்லாம் எங்களைப் பார்த்தாலே ஜெர்க் ஆகுறாங்க சார். தண்ணிக்கு ரொம்ப தேங்க்ஸ்’னு சொல்லிட்டு வாட்டர் பாட்டிலை திருப்பிக் கொடுத்தோம். ‘எனக்கு கொரோனா பாசிட்டிவ்... நாலு நாள் ஆகுது... நல்லாதானே இருக்கேன்? கொரோனா எல்லாம் இன்டர் நேஷனல் புரளிம்மா...’னு சொல்ல, எங்களுக்கு விக்கல் எடுத்துடுச்சு. வீட்டை விட்டு வெளிய வந்து, ஒரு சானிடைசர் பாட்டில்ல பாதியை காலி பண்ணி கை கழுவினது தனிக் கதை.

2K kids: குரைச்சுட்டே இருந்த நாய், அந்தக் குழந்தை...

குழந்தையும் தெய்வமும்!

ஒரு வீட்டுல தாத்தா, பாட்டி மட்டும் இருந்தாங்க. ‘எங்க, மகன், மருமகள், பேரன்னு எல்லாருக்கும் கொரோனா பாசிட்டிவ். மூணு பேரும் மாடி வீட்டுல தனிமைப் படுத்திட்டு இருக்காங்க. நாங்க கீழ் வீட்டுல இருக்கோம்’னு சொல்லி, அவங்க நாங்க கேட்ட விவரங்களை சொல்லிட்டு இருக்கும்போது பார்த்தா, ஒரு குழந்தைத் தவழ்ந்து வந்து, தன்னோட பிஞ்சுக் கைகளை உயர்த்தி, உயர்த்தி சத்தம் போட்டது.

‘என் பேத்திதான். அம்மா, அப்பாலாம் கொரோனாவால மாடி வீட்டுல இருக்குறதால, இவளை நாங்கதான் பார்த்துக்குறோம். பாவம் புள்ள... அவங்களை எல்லாம் பார்த்து 12 நாள் ஆச்சு... அந்த ஏக்கத்துல இருக்கு...’னு சொல்ல, நாங்க ஒரு மாதிரி மெல்ட் ஆகிட்டோம்.

சமூக இடைவெளியில் நின்னபடியே அந்தக் குழந்தைக்கு விதவிதமா முகபாவனைகள் காட்டி நாங்க சில நிமிடங்கள் விளையாட, பொக்கை வாய்ல எச்சில் ஒழுக அது சிரிச்ச சிரிப்பு அவ்வளவு அழகு. அந்த நாள் ரொம்பவே நிறைவா இருந்துச்சு எங்களுக்கு.

அக்கா சொன்ன சம்பவம்!

அன்னிக்கு வேலையை முடிச்சிட்டு வழக்கமா அட்டெண்டன்ஸ் போடற இடத்துல எல்லாரும் சந்திச்சோம். தினமும் ஃபீல்டுல எங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லி சிரிச்சுக்குறது வழக்கம். அப்படித்தான் அன்னிக்கும் சிரிச்சுட்டு இருந்தோம். அப்போ ஒரு தூய்மைப் பணியாளர் அக்கா, ‘நீங்கெல்லாம் கஷ்டத்தைக்கூட எப்படி காமெடியா சொல்லி சிரிச்சுக்குறீங்க..?!’னு சொல்லிட்டு, தன்னோட அனுபவத்தைச் சொன்னாங்க.

‘காலையில வேலையை முடிச்சிட்டு, ஒரு வீட்டு முன்னாடி உட்கார்ந்து சாப்பிட்டு இருந்தேன். வெயில் பயங்கரமா இருந்தது. வாட்டர் பாட்டில்ல நான் கொண்டுட்டுப் போன தண்ணீர் தீர்ந்துடுச்சு. அதனால, அந்த வீட்டுக்காரங்ககிட்ட தண்ணி கேட்டேன். தண்ணியும், ஒரு கிண்ணத்துல கொஞ்சம் குழம்பும் கொடுத்தவங்க, ‘சாப்பிட்டுட்டு, இந்த பாட்டிலையும் கிண்ணத்தையும் அப்படியே

குப்பைத்தொட்டியில போட்டுட்டுப் போயிடுங்க’னு சொல்ல, ரொம்ப சங்கடமா போயிடுச்சும்மா. சாப் பாடு தொண்டைக்குழிக்குள்ள இறங்கவே இல்ல...’னு வருத்தமா சொன்னாங்க.

கொரோனாவும் தனிமையும்!

ஒரு வீட்டுல, ரொம்ப நேரமா கூப்பிட்டும் யாரும் வரலை. ஆனா, உள்கதவு திறந்திருந்தது. அந்தப் பக்கம் போன ஒருத்தவர், அந்த வீட்டுல ஒரே ஒரு பாட்டி மட்டும்தான் இருக்குறதா சொன்னார். மீண்டும் குரல் கொடுத்தோம்.

ஒரு பாட்டி, உள்கதவுகிட்ட வந்து நின்னுட்டு, எங்களை உள்ளே வரச் சொன்னாங்க. பார்க்க ரொம்ப சோர்வா இருந்தாங்க. ‘நான் மட்டும் தனியாதான் இருக்கேன். ரெண்டு பசங்களும் டாக்டர்ஸ், வேற வேற ஏரியால இருக்காங்க. எனக்கு தினமும் ஒரு பொண்ணு வந்து சமைச்சுக் கொடுக்கும். கொரோனாவால அது இப்போ வர்றதில்ல. என்னாலயும் சமைக்க முடியாததால, ஒரு வாரமா பால், பன், பழம்னு சாப்பிட்டு இருக்கேன். ஒரு உதவி பண்ண முடியுமா? எனக்கு ஒரு சாப்பாடு வாங்கிக் கொடுக்க முடியுமா?’னு கேட்க, எங்களுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. பக்கத்து ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்துட்டு, அவங்க பசங்க போன் நம்பர் வாங்கி, அவங்க அம்மாவுடைய நிலைமையைச் சொல்லிட்டு வந்தோம். `என்ன வாழ்க்கை சார் இது'னு ஆன நாள் அது.

2K kids: குரைச்சுட்டே இருந்த நாய், அந்தக் குழந்தை...

நாய்கள் ஜாக்கிரதை!

காலிங் பெல்லை அடிச்சதும், அந்த வீட்டுல நாய் குரைக்கிற சத்தம் கேட்டது. உஷாராகி ரோட்டுல போய் நின்னுட்டோம். அந்த வீட்டு அக்கா வந்து விவரங்கள் எல்லாம் சொல்லிட்டு, ‘என்ன கிட்ட வந்து கூட பேசாம ரோட்டுல நின்னுட்டே பேசுறீங்க..?’னு கேட்டாங்க. ‘இல்ல... உங்க நாய் குரைக்குது... அதான்...’னு சொன்னோம். அப்போ அவங்களோட பையன் மொபை லோட என்ட்ரி கொடுத்தான். பார்த்தா... நாய் குரைக்கிற சத்தத்தை அவன்தான் மொபைல்ல ப்ளே பண்ணிட்டு இருந்திருக்கான்.

‘எங்க வீட்டுல நாய்லாம் இல்ல. யார் காலிங் பெல்லை அடிச்சாலும் இவனுக்கு இது ஒரு விளையாட்டு...’னு அவங்க அம்மா தன் பையனோட டெக்னாலஜி அறிவை பெருமை யோட சொல்ல... நீங்கெல்லாம் நல்லா வருவீங்கடானு மைண்ட் வாய்ஸ்ல சொல்லிட்டே வந்துட் டோம்.

அடேய் கொரோனா... உனக்கு எப்போடா ‘பை’ சொல்றது?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism