Published:Updated:

கேரளா பட்ஜெட்டில் நிதி அமைச்சர் கூறிய மாணவியின் கவிதை... வெளிச்சத்துக்கு வந்த அரசுப்பள்ளி அவலம்!

கவிதை எழுதிய மாணவி சினேகா

கொரோனா குறித்து மலையாளக் கவிதை எழுதிய எட்டாம் வகுப்பு மாணவி சினேகாவை இப்போது கேரள நெட்டிசன்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

கேரளா பட்ஜெட்டில் நிதி அமைச்சர் கூறிய மாணவியின் கவிதை... வெளிச்சத்துக்கு வந்த அரசுப்பள்ளி அவலம்!

கொரோனா குறித்து மலையாளக் கவிதை எழுதிய எட்டாம் வகுப்பு மாணவி சினேகாவை இப்போது கேரள நெட்டிசன்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

Published:Updated:
கவிதை எழுதிய மாணவி சினேகா

கேரள சட்டசபையில் 2021-2022-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நேற்று நடந்தது. பட்ஜெட் தாக்கல் செய்த கேரள நிதி அமைச்சர் ஐசக் தாமஸ், பாலக்காடு அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி சினேகா எழுதிய, கொரோனாவுக்கு எதிரான நம்பிக்கை பரப்பும் கவிதையைக் கூறி தனது உரையை தொடங்கினார்.

``பொழுது புலர்கிறது

சூரியன் முழு தேஜசுடன் உதிக்கிறது

கனிவான பூக்கள் விரிகின்றன

வெளிச்சம் பூமியை சொர்க்கம் ஆக்குகிறது

நாம் கொரோனாவுக்கு எதிராகப்

போராடி வெற்றிபெறவும்

ஆனந்தம் நிறைந்த விடியலை

திரும்ப அடையவும் செய்வோம்"

என்ற பொருள் கொண்ட அந்த மலையாளக் கவிதையை எழுதிய எட்டாம் வகுப்பு மாணவி சினேகாவை இப்போது கேரள நெட்டிசன்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

சினேகா படிக்கும் ஸ்கூலின் அவல நிலை
சினேகா படிக்கும் ஸ்கூலின் அவல நிலை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி சினேகா, இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ``நிதி அமைச்சரின் செயலர் என்னை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். எனது போட்டோவை அனுப்பித் தரும்படி கேட்டார். எனக்கு எதுவும் புரியவில்லை. அதன் பிறகுதான் என் கவிதையை நிதி அமைச்சர் சட்டசபையில் பேசியதை அறிந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா லாக்டெளன் காலத்தில் `அக்‌ஷர விருக்‌ஷம்' என்ற தலைப்பில் நடந்த போட்டியில் நான் எழுதிய கவிதை அது. ஆசிரியருக்கு வாட்ஸ்அப்பில் நான் அந்தக் கவிதையை அனுப்பினேன். ஏதோ இதழில் வெளியிட அந்தக் கவிதையைக் கேட்கிறார்கள் என நினைத்தேன். இப்படி ஒரு சர்ப்ரைஸை நான் எதிர்பார்க்கவில்லை.

பெற்றோருடன் சினேகா
பெற்றோருடன் சினேகா

நான் அதிகமாக கதைதான் எழுதுவேன். நண்பர்கள் உற்சாகப்படுத்துவதால் எப்போதாவது கவிதை எழுதுவேன். ஏழாம் வகுப்புப் படிக்கும்போது ஆசிரியர் பாபு சார் கவிதை எழுத எனக்கு மிகவும் உத்வேகம் தந்தார்" என்கிறார் சினேகா.

சினேகாவின் அப்பா கண்ணன் விவசாயத்துக்கான டிராக்டர் ஓட்டும் பணி செய்து வருகிறார். அம்மா ருமாதேவி, சகோதரி ருத்ரா என எளிய குடும்பம் சினேகாவினுடையது. ``என் மகள் கதை மற்றும் கவிதை மீது ஆர்வமாக இருப்பாள். மாதவிக் குட்டியின் படைப்புகளை விரும்பிப் படிப்பாள்" என்கின்றனர் சினேகாவின் பெற்றோர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது ஒருபுறம் இருக்க, மாணவி சினேகா நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். ``எங்கள் பள்ளி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. சுவர்கள் சிதைந்த நிலையிலும், உதிர்ந்த நிலையிலும் இருக்கின்றன. அது வாடகைக் கட்டடம். அங்கு நிறைய பிள்ளைகள் படிக்கிறார்கள். எங்கள் பள்ளிக்காக புதிய கட்டடம் கட்டித் தருவதாகச் சொல்லி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. இந்தக் கொரோனா காலம் முடிந்து மீண்டும் ஸ்கூலுக்கு போகும்போது, புதிய வகுப்பறைக்குப் போக வேண்டும் என விரும்புகிறோம். இதை விண்ணப்பமாகவே கூறுகிறேன்" என்றார்.

சினேகா தனது பள்ளியைப் பற்றி கூறியதும் குழல்மந்தம் அரசுப் பள்ளியின் அவலநிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சினேகா படிக்கும் அரசுப்பள்ளி 80 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருவதாகக் கூறுகிறார்கள். அந்தப் பள்ளி சுற்றிலும் தகர ஷீட்டுகளால் மறைக்கப்பட்டும், மழை பெய்தால் ஒழுகும் நிலையில் ஓடுகள் சேதம் அடைந்தும் காணப்படுகின்றன. புதிய பள்ளிக் கட்டடத்துக்காக இடம் ஒதுக்கப்பட்டு மூன்றரை கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பணி தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறுமியின் எழுத்தால் பள்ளிக்குப் புத்துயிர் கிடைக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism