Published:Updated:

2K kids: மாணவர்கள் கோர்ட்டுல கொரோனாவுக்கு மன்னிப்பே கிடையாது!

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

- ஸ்ரீரோஜா.அ

2K kids: மாணவர்கள் கோர்ட்டுல கொரோனாவுக்கு மன்னிப்பே கிடையாது!

- ஸ்ரீரோஜா.அ

Published:Updated:
கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

என்னை மாதிரி இதுக்கு முன்னாடியும் எத்தனையோ பேர் புலம்பியிருப்பாங்க, நீங்க கேட்டிருப்பீங்கதான். ஆனாலும் பரவாயில்ல... எங்க சோகம் தீருறவரை எங்களுக்குப் புலம்பறதைத் தவிர, வேற வழியில்ல. பில்ட் அப் ஓவரா இருக்கேனு பாக்குறீங்களா... வேற என்ன... கொரோனாவால எங்க காலேஜ் லைஃப் காலியான கதையைத்தான் சொல்லப் போறேன்.

‘உங்க லைஃப்ல கோல்டன் டேஸ் எது?’னு உங்களை எல்லாம் கேட்டா என்ன சொல் வீங்க? பள்ளி கடைசி வருஷமான ப்ளஸ் டூ, அப்புறம் காலேஜ் லைஃப்... பெரும்பாலும் இதுதானே பதிலா இருக்கும்? ஆனா, இந்த ரெண்டு முக்கியமான வசந்த காலத்தையும் எங்ககிட்ட இருந்து பறிச்சிடுச்சு... தம்மாத் துண்டு கொரோனா வைரஸ். எங்க ஸ்மைலியை எடுத்துக்கிட்டு மாஸ்க் மாட்டிவிட்ட அந்தக் கிருமிக்கு மாணவர்கள் கோர்ட்டுல மன்னிப்பே கிடையாது யுவர் ஆனர்.

2K kids: மாணவர்கள் கோர்ட்டுல கொரோனாவுக்கு மன்னிப்பே கிடையாது!

ஃபிளாஷ்பேக்கை சுத்தினா... ப்ளஸ் டூ ஃபைனல் எக்ஸாம்ஸ் நேரம். ‘கொரோனா வால லாக்டௌன் போடப் போறாங் களாம், கெமிஸ்ட்ரி எக்ஸாம் இருக்காது’னு பச்ச மண்ணா துள்ளிக் குதிச்சோம். ‘இல்ல நீ பரீட்சையை எழுது, அப்புறம் பார்த்துக்கலாம்’னு கொரோனாவும் பள்ளிக் கல்வித் துறையும் கைகோத்து சதி பண்ண, பரீட்சை சம்பவம் நடந்து முடிஞ்சது. அந்த லாஸ்ட் டே பார்ட்டி ஜாலினுலாம் ஒண்ணு இருக்குமே... அதெல் லாம் கொரோனா முதல் அலையில அடிச்சிட்டு போயிடுச்சு.

அடுத்து, ரிசல்ட் வந்து காலேஜ் அட்மிஷன். ‘பீச்சுக்கு எதிர்ல நம்ம காலேஜு, இனி லைஃப் ஜிங்கலாலா’னு ஜாலியா இருந்த எங்களை, ஆன்லைன் லேயே அட்மிஷன் போட்டு, ஆன்லைன்லயே கிளாஸை ஆரம்பிச்சு விட்டாங்க. காலேஜ், கிளாஸ்ரூம், அவுட்டிங், டூர்னு இருந்த எங்க ஆசையில ஆசிட் ஊத்தி, மொபைல் கேமரா முன்னாடி உட்கார வெச்சுட்டாங்க. எக்ஸாம்னா ஹால் டிக்கெட் எடுத்துக்கிட்டோமானு செக் பண்ண வேண்டியவங்களை, டேட்டா இருக்கா, சார்ஜ் இருக்கான்னு செக்லிஸ்ட்டை மாத்திட்டாங்க. கேன்டீன், காபினு கேம்பஸ் ரவுண்ட் போக வேண்டியவங்கள மீட்டிங் ஐடி, புரொஃபைல் நேம்னு முடிச்சுவிட்டாங்க. இதையெல்லாம் விட கொடுமை, ‘காது தானே கேட்டுட்டு இருக்கு, இந்தத் தேங்காயைக் கொஞ்சம் துருவிக் கொடு...’னு டார்ச்சர் பண்ணுற மம்மீஸ். மாண்புமிகு மாணவர் களோட நிலைமையைப் பார்த்தீங்களா மக்கா?!

2K kids: மாணவர்கள் கோர்ட்டுல கொரோனாவுக்கு மன்னிப்பே கிடையாது!

சீனியரும் இல்லாம, ஜூனியரும் இல்லாம ஒரு கல்லூரி வாழ்க்கை. செமஸ்டர் நடத்தி எக்ஸாம் லீவுன்னு ஒண்ணு விட்டாங்க. காலேஜ் நாள் களுக்கும் ஹாலிடேஸுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல. வார்ட்ரோப்ல இருக்குற டிரெஸ்ஸை எல்லாம் போட ஒரு வழியும் இல்ல. இப்படி ‘இல்லை’களால் ஆன எங்க நாள்களை, ரெகுலர் காலேஜ்ல படிச்சாலும் கரஸ்ல டிகிரி வாங்கின செட்டா இருக்கப் போறோம்னு பெரும் துக்கத்தோட கழிச்சிட்டு இருந்தோம். மொபைல்லயே டிகிரி முடிச்சு, அந்த சர்டிஃபிகேட்டையும் கொரியர்லயே அனுப்பிடு வாங்க போலயே மிரட்சி யில இருக்கும்போது, ‘ஏய்... காலேஜ் ரீஓபன் பண்ணப் போறாங்களாம்ப்பா...’னு அப்பப்போ எங்க ஃப்ரெண்ட்ஸ் வாட்ஸ்அப் குரூப்ல ஒரு வதந்தி பரவும். ஆனா, ஊரடங்கு மெகா ஆஃபர்ல அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிட்டே இருக்கும்.

சமீபத்துல அப்படித்தான் ‘காலேஜ் ரீஓபன்’னு சொன்னப்போ... கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்க பாருங்கனு இருந்தோம். ஆனா, அந்த நாளும் எங்க வாழ்க்கையில இப்போ வந்திருக்கு. ஆமா... நெஜம்ம்மாவே காலேஜ் ரீஓபன் ஆகிடுச்சு. ‘சரஸ்வதி சபதம்’ படத்துல சிவாஜிக்கு பேச்சு வந்து ‘அம்மா, அப்பா, ஓசை, ஒலி, சப்தம், நாதம், எழுத்து, சொல்...’னு சொல்ற சீன் எங்க வாழ்க்கையிலயும் நடந்துச்சு. ‘அதோ காலேஜ், கிளாஸ் ரூம், கேன்டீன், கிரவுண்ட், ஸ்டோன் பென்ச், ஆடிட்டோரியம், லைப்ரரி...’னு கத்திட்டே கேம்பஸ் முழுக்க ஓடினோம். ஃபிரெண்ட்ஸை எல்லாம் பார்த்தப்போ கண்ணுகூட லைட்டா வேர்த்துடுச்சு... ஒரே ஃபீலிங்ஸ். அப்போதான் ஒருத்தி சொன்னா, ‘மூன்றாம் அலை வந்தா மறுபடியும் லாக்டௌன் போட்டுடுவாங்களாம்ப்பா. நான்காம் அலை வரும்போது நமக்கு ஃபைனல் இயரே முடிஞ்சிடும்!’

என்னது நாலாவது அலையா... நல்லா கிளப்புறீங்கடா பீதிய!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism