Published:Updated:

2K kids: தேங்காய் மட்டை டு கயிறு... ஒரு மில் ரிப்போர்ட்!

தேங்காய் மட்டை டு கயிறு
பிரீமியம் ஸ்டோரி
தேங்காய் மட்டை டு கயிறு

வர்ஷா. இ

2K kids: தேங்காய் மட்டை டு கயிறு... ஒரு மில் ரிப்போர்ட்!

வர்ஷா. இ

Published:Updated:
தேங்காய் மட்டை டு கயிறு
பிரீமியம் ஸ்டோரி
தேங்காய் மட்டை டு கயிறு

தமிழகத்தின் தென்முனையான குமரி மாவட்டம், கேரளாவின் சாயல் போர்த்தியது. குமரி மாவட்டம், நாகர்கோவிலில் எங்கு நோக்கினும் தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்து நிற்கும். ஒவ்வொரு வீட்டிலும் தவறாமல் தென்னை மரம் இருக்கும். ‘பிள்ளையை பெத்தா கண்ணீரு, தென்னையை நட்டா இளநீரு’ என்று சொல்லப்படுவதுபோல, தென்னை விவசாயம் இம்மக்களைத் தாங்கிப் பிடிக்கும் முக்கியமான தொழிலாக இருக்கிறது.

ஓலை முடைவது முதல் கயிறு திரிப்பது வரை, தென்னை மரத்தின் அனைத்து பாகங் களையும் மதிப்புக்கூட்டி விற்பனைப் பொருளாக்குகின்றனர். குறிப்பாக, தேங்காயின் மேல்மட்டையில் இருந்து கயிறு பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள், நாகர்கோவிலில் பல உள்ளன. அவற்றின் தயாரிப்பு முறை மற்றும் அதில் தங்கள் அனுபவங் களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள், இந்தத் தொழிலைச் செய்து வரும் இரண்டு பேர்.

2K kids: தேங்காய் மட்டை டு கயிறு... ஒரு மில் ரிப்போர்ட்!

நரையன்விளையில் மில் வைத்திருக்கிறார் ராஜேந் திரன். ‘`எங்க ‘இராஜேஸ்வரி ஃபைபர்’ மில்லுக்கு, முதல்ல கதம்பல் வந்து சேரும். கதம்பல்னா, தேங்காயை உரிச்சதுக்கு அப்புறம் மிஞ்சுற அந்த மேல் மட்டை. அந்தக் கதம்பலை மூணு மாசம் ஊறவெச்சு, அப்புறம் மெஷின்ல கொடுத்தா சவுரி வரும். அதாவது, தேங்காய் நார் (Coir). அதுக்கு அப்புறம் மிஞ்சுற தூள், கழிவு. தேங்காய் நாரை மூன்று வகையா பிரிப்போம். முதல் தரம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகுது. ரெண்டாவது தரம், மெத்தை, சோபா செய்யப் பயன்படுத்தப்படும். மூணாவது தரம்தான், கயிறு திரிக்கப் பயன்படும். கடைசியா மிஞ்சுற கழிவுத் தூளும் விலைக்குப் போயிடும். இந்தத் தொழில்ல நிறைய கம்பெனிகள் இருக்குறதால லாபம் கம்மியாதான் கிடைக்கும். இருந்தாலும் எங்க பாடு குறையில்லாம போகுது. என் பிள்ளைகளும் இந்தத் தொழிலைத்தான் பார்க்குறாங்க’’ என்கிறார் நார் வேலைகளைப் பார்த்தபடி.

புதூரில் உள்ள ‘சாரதி ஃபைபர்’ கம்பெனியை பத்து வருடங்களாக நடத்தி வருகிறார் இதழ்பெருமாள். ‘`நானும் என் மனைவி வளர்மதியும் எங்க ரெண்டு பேரோட உழைப்பையும் கொட்டி செய்யுற தொழில் இது. இதுல, வெளிநாடு வரை ஏற்றுமதி ஆகுற முதல் தர நார், ஒரு டன் 35,000 ரூபாய்க்கு விலை போகும். ரெண்டாவது தர நார், ஒரு டன் 2,000 ரூபாய்க்கு விலை போகும் மூணாவது தரமான கயிறு முறுக்குற நார், ஒரு டன் 5,000 ரூபாய்க்கு விலை போகும். எங்க கம்பெனியில 30 பேர் வேலைபாக்குறாங்க.

2K kids: தேங்காய் மட்டை டு கயிறு... ஒரு மில் ரிப்போர்ட்!
2K kids: தேங்காய் மட்டை டு கயிறு... ஒரு மில் ரிப்போர்ட்!
2K kids: தேங்காய் மட்டை டு கயிறு... ஒரு மில் ரிப்போர்ட்!

முன்னதா, மண்ணுல பெரிய குழி தோண்டி பாந்து அமைச்சு, தண்ணி ஊத்தி, கதம்பலை அதுல ஊறவைப்போம். முன்னாடியெல்லாம் ஆள்கள்தான் அந்தப் பெரிய குழிக்குள்ள இறங்கி கதம்பலை எடுப்பாங்க. இப்போ அந்த வேலையெல்லாம் மெஷின்ல செய்யுறோம். முதல் தர நார்ல சாயம் ஏத்துறோம். அப்போ தான் விரும்பி வாங்குறாங்க. குறிப்பா, கருப்பு சாயம் போட்டாத்தான் நல்லா இருக்கும். சாயத்தோட உப்பு போட்டா, சாயம் நல்லா பிடிக்கும். கழிவுப் பொருளான தூளை எங்ககிட்ட வாங்குறவங்க அதை கேக் மாதிரி கட்டி ஆக்கி, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ணுவாங்க.

இந்தக் கொரோனா காலத்துல எங்களுக்கும், எங்கள நம்பியிருந்த தொழிலாளர்களுக்கும் ரொம்பக் கஷ்டம். இப்பத்தான் மறுபடியும் தொழிலைத் தொடங்கியிருக்கோம்.’’

2K kids: தேங்காய் மட்டை டு கயிறு... ஒரு மில் ரிப்போர்ட்!
2K kids: தேங்காய் மட்டை டு கயிறு... ஒரு மில் ரிப்போர்ட்!

சுற்றியுள்ள கிராமங்களிலும் தென்னை சாகுபடியும், அதன் உப தொழில்களும் மக்க ளுக்குக் கைகொடுத்து வருகின்றன. தென்னை யால் தழைக்குது இவர்களின் வாழ்வு.