Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: நள்ளிரவில் கொட்டிய கனமழை; வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

வெள்ளம்
வெள்ளம்

கோத்தகிரியில் நள்ளிரவில் திடீரென கொட்டித்தீர்த்த பெருமழையில் நான்கு வீடுகள் சேதமடைந்தன. கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நீலகிரியில் இந்த ஆண்டு பருவம் தவறியே மழை பெய்தது. இதனால் உறைபனியும் மிக தாமதமாகவே தொடங்கியது.

வெள்ளம்
வெள்ளம்

தற்போது உறைபனியின் தாக்கம் குறைந்து, ஒரு சில இடங்களில் மழை பெய்துவருகிறது.

கோத்தகிரி, குன்னூர், கொடநாடு, கெத்ததை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெருமழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 120 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வெள்ளம்
வெள்ளம்

திடீரென கொட்டித்தீர்த்த பெருமழை காரணமாக கோத்தகிரி அருகிலுள்ள குயின்சோலை பகுதியில் நான்கு வீடுகள் சேதமடைந்தன. கார் ,பைக் உள்ளிட்ட வாகனங்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

மழை பாதிப்பு குறித்து நம்மிடம் பேசிய குயின்சோலை மகேந்திரன், ``இரவு 10 மணிக்கு ஆரம்பிச்ச மழை விடியற் காலை மூணு மணி வரை நிக்காம பெஞ்சுது. ஆத்துல பெருக்கெடுத்து வெள்ளம் ஓடுது.

வெள்ளம்
வெள்ளம்

ஓரமா நிப்பாட்டிவெச்சிருந்த கார், பைக், பிக்கப் வண்டி எல்லாத்தையும் அஞ்சு கிலோமீட்டர் தூரத்துக்கு அடிச்சிட்டு போயிடுச்சு. ஆத்துல அடிச்சிட்டுப் போன ஈக்கோ கார தகர டப்பா மாதிரி கண்டுபுடுச்சு எடுத்தோம். நைட் நேரமானதால மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்ல. எலெக்ஷன் பிஸியில இருக்கோமுன்னு அதிகாரிங்க யாரும் வந்து பாதிப்புகளை இன்னும் பார்க்கலை" என்றார்.

மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு