Published:Updated:

சர்க்கரை பொம்மை... இது தஞ்சாவூர் ருசி!

நளினி பாய்
பிரீமியம் ஸ்டோரி
நளினி பாய்

மராட்டிய மாநிலத்தில், பிறந்த குழந்தைக்கு நான்கு வகையான மணிகளை கழுத்தில் அணிவித்துவிடுவார்கள். அதில் இந்த சர்க்கரை மணி பொம்மையும் ஒன்று.

சர்க்கரை பொம்மை... இது தஞ்சாவூர் ருசி!

மராட்டிய மாநிலத்தில், பிறந்த குழந்தைக்கு நான்கு வகையான மணிகளை கழுத்தில் அணிவித்துவிடுவார்கள். அதில் இந்த சர்க்கரை மணி பொம்மையும் ஒன்று.

Published:Updated:
நளினி பாய்
பிரீமியம் ஸ்டோரி
நளினி பாய்

தஞ்சாவூர் என்றாலே தலையாட்டி பொம்மை பிரபலம் என்று அறிவோம். அதே தஞ்சாவூரில் இன்னொரு பொம்மையும் விரும்பி வாங்கப்படுகிறது. அது, சர்க்கரைப் பாகில் செய்யப்படும் ‘சர்க்கரை பொம்மை’. தமிழ்க் குடும்பங்களின் சுப நிகழ்ச்சிகளில் அதிரசம், லட்டு போன்ற இனிப்புகள் முக்கியப் பங்கு வகிப்பதுபோல, மராட்டிய மாநிலத்தின் பாரம்பர்யத்தில் இந்த சர்க்கரை பொம்மை இனிப்பு, அவர்களுடைய சுப நிகழ்ச்சிகளிலும், இறந்தவர்களுக்குப் படைக்கும் பண்டங்களிலும் முக்கியப் பங்கு வகிப்பது. சரி, அது எப்படி தஞ்சாவூருக்கு வந்தது? தஞ்சாவூர் மாவட்டம், தெற்கு வீதி அய்யங்கடைத் தெருவில் வசிக்கும் நளினி பாய் சொல்கிறார் கேளுங்கள்.

‘`மராட்டிய மாநிலத்தில் இருந்து 1947-ல் தமிழ்நாட்டுக்குக் குடிபெயர்ந்த பல குடும்பங் களில் எங்கள் குடும்பமும் ஒன்று. ஏழு தலை முறைகளாக சர்க்கரை பொம்மை தொழில் செய்துவரும் குடும்பம் நாங்கள். எங்கள் தாத்தா கங்கா பிரசாத் சேட், தமிழ்நாட்டிலும் அதை செய்ய ஆரம்பித்தார். மராட்டிய மக்கள் மட்டுமல்லாது, தமிழ்க் குடும்ப நிகழ்ச்சிகளிலும் சர்க்கரை பொம்மை இடம் பிடிக்க ஆரம்பிக்க, இப்போது தஞ்சாவூர் மட்டுமல்லாது கும்பகோணம், மயிலாடுதுறை, கோயம்புத்தூர் போன்ற பல இடங்களில் இருந்து வந்து இந்த பொம்மையை வாங்கிச் செல்கிறார்கள். நிச்சயதார்த்தம், திருமணம், காதுகுத்து போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு, தேவையான அச்சில் வடிவமைத்துத் தரு கிறோம்’’ என்றவர், பல வடிவங்களில் இந்த பொம்மை செய்யப்படுவது பற்றிக் கூறினார்.

சர்க்கரை பொம்மை... இது தஞ்சாவூர் ருசி!

‘`முருகன், விநாயகர், சரஸ்வதி, நடராஜர், ராஜ ராஜ சோழன், திருமணக் கோலத்தில் மாப்பிள்ளை, மணப்பெண், காந்தி, நேரு மற்றும் தேங்காய், வாழைப்பழம், அன்னாசிப் பழம், பொங்கல் பானை, கிண்ணம், தேர், மண்டபம், குத்துவிளக்கு, யானை என விருப்பத்துக்கு ஏற்பவும், விசேஷங்களுக்கு ஏற்பவும் சர்க்கரை பொம்மை செய்து கொடுக்கிறோம். கடந்த பொங்கல் பண்டிகைக் குக்கூட பலரும் இதை வாங்கிச் சென்றார்கள். இறந்தவர்களுக்குப் படைக்கும் பொருள் களிலும் இந்த சர்க்கரை பொம்மை இடம் பெறும்.

மராட்டிய மாநிலத்தில், பிறந்த குழந்தைக்கு நான்கு வகையான மணிகளை கழுத்தில் அணிவித்துவிடுவார்கள். அதில் இந்த சர்க்கரை மணி பொம்மையும் ஒன்று. இப்படி, பிறப்பு முதல் இறப்பு வரை இந்த சர்க்கரை பொம்மை இடம்பிடிக்கிறது’’ என்று நளினி பாய் சொல்ல, அவர் சகோதரி விஜயா பாய், ‘`மராட்டிய மாநிலத்தில்கூட இந்தக் கலை மறைந்துவருகிறது. தஞ்சாவூரில்தான் வாழ் கிறது, எங்களை வாழவைக்கிறது’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

சர்க்கரை பொம்மை... இது தஞ்சாவூர் ருசி!

சர்க்கரை பாகு பொம்மை செய்முறை பற்றி நளினி பாய் கூறியபோது, ‘`முதலில் சர்க்கரையை பாகு போல் காய்ச்ச வேண்டும். அதற்கு செம்பு அல்லது பித்தளை பாத்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கம்பி பதத்திற்கு பாகு வந்ததும் ‘டோலி’ என்ற பண்டைய கால பாத்திரத்தில் ஊற்றி அதனை மர அச்சில் ஏற்ற வேண்டும். 15 நிமிடங்களில் சர்க்கரை பொம்மை தயாராகிவிடும். உலர்ந்த பிறகு அதற்கு வண்ணம் பூசுவோம். ஒரு கிலோ சர்க்கரை பொம்மையை 400 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்’’ என்றவர்,

‘`இந்த சர்க்கரை பொம்மை மூலமாக பெரிய வருமானமெல்லாம் கிடைத்துவிடாது. பல நாள்களில், செலவுக்கு ஏற்ற வரவு கிடைப்பதே சந்தேகம்தான். ஆனாலும், வேறு வழியில்லாத சூழலில், இதைச் செய்து வருகிறோம். அதுவும் எங்கள் குடும்பம் மட்டும்தான் இந்தத் தொழிலை விடாமல் செய்து வருகிறோம்.

சர்க்கரை பொம்மை... இது தஞ்சாவூர் ருசி!

இந்த சர்க்கரை பொம்மையைச் செய்வதற் காக நாங்கள் பயன்படுத்தி வரும் அச்சு, தாத்தா காலத்தியது. புதிதாக வாங்க வேண்டு மென்றால், 22,000 ரூபாய் தேவை. இந்த அச்சுக்கான மரம், அரிதானது. மராட்டிய மாநிலத்தில் ஆண்டுக்கு ஒருதடவை கூடும் சந்தையில் மட்டுமே கிடைக்கும். அதுவும்கூட சில நேரங்களில் போலியாகத்தான் உள்ளது. தற்போது மைசூரில்கூட கிடைக்கிறது. ஆனால், ஏற்கெனவே வரவுக்கு செலவுக்கும் இடையே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில், அதை எங்களால் வாங்க இயல வில்லை. யாராவது உதவி செய்தால், எங்கள் பிழைப்பு ஓடும்’’ என்றார் கவலைக்குரலில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism