உலக அரங்கில் ஜொலிக்கும் ஒரு தமிழன் சுந்தர் பிச்சை சொல்கிறார்... “ஒரு தலைவனாக உங்களின் வெற்றியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது; மற்றவர்களின் வெற்றியிலும் கவனம் செலுத்த வேண்டும்!”

2015, ஆகஸ்ட் 10-ம் தேதி. அன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப் பட்ட ஒரு பெயர் `சுந்தர் பிச்சை.’ அன்றுதான் அவர் கூகுளின் சி.இ.ஓ-வாக அறிவிக்கப்பட்டார். அவரே அடுத்த நான்கு வருடங்களில் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ-ஆகவும் உயர்ந்தார்.

கூகுளின் இணை நிறுவனர் லாறிபேஜ் (Larry Page) ஆல்பாபெட்டின் சி.இ.ஓவாகச் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், அவர் அந்தப் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், `கூகுளின் இணை நிறுவனர்களான லாறிபேஜ், செர்ஜி ப்ரின் (Sergey Brin) ஆகியோர் இணை நிறுவனர்களாகவும், பங்குதாரர்களாகவும், ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்களாகவும் தங்களின் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்தது 2004, ஏப்ரல் 1-ம் தேதி. அன்றுதான் ஜி-மெயில் சேவை தொடங்கியது!

இது தொடர்பாக லாறிபேஜும், செர்ஜி ப்ரின்னும் தங்கள் ஊழியர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், `ஆல்பாபெட் நிறுவனம் வழக்கமான நிறுவனம் கிடையாது. தொழிநுட்பத்தில் புதிய சவால்களை நோக்கிப் பயணிக்கும் ஒன்று. இந்த நிறுவனத்தை இன்னும் திறம்படச் செயல்படவைக்க வழிகள் இருக்கும்போது நாங்களே அதைக் கையில் வைத்திருக்க வேண்டும் என என்றுமே நினைத்தது கிடையாது. நம் பயனாளர்கள், ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் தொழில்நுட்பம் தொடர்பான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் செயல்படுகிறார் சுந்தர் பிச்சை.

கூகுளையும் ஆல்பாபெட் நிறுவனத்தையும் இவரைவிட எவராலும் சிறப்பாக வழிநடத்த முடியாது” என்று குறிப்பிட்டி ருக்கிறார்கள். மேலும், ஆல்பாபெட் மற்றும் கூகுள் நிறுவனத்துக்கு இனி இரண்டு நிர்வாக இயக்குநர்களும், ஒரு தலைவரும் தேவையில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ-ஆக நியமிக்கப்பட்டது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, `தொழில்நுட்பத்தின் மூலம் பெரிய சவால்களைச் சமாளிப்பதில் ஆல்பாபெட்டின் நீண்டகாலத் திட்டம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். லாறிபேஜ் மற்றும் செர்ஜிக்கு எனது நன்றிகள்” என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டது, அமெரிக்க அதிபரை சந்தித்து, கூகுளின் வருடாந்திர மாநாட்டை நடத்தியது என அந்த நிறுவனத்தின் முகமாகவே கடந்த சில காலமாக செயல்பட்டு வருகிறார் சுந்தர் பிச்சை.

வாழ்த்துகளுடன் சவால்களையும் ஏற்றுக்கொள்வார் சுந்தர் பிச்சை!