Published:Updated:

வேலன்டைன்ஸ் டே... துணையை சந்தோஷப்படுத்த... சர்ப்ரைஸ் ஐடியாஸ்!

வேலன்டைன்ஸ் டே
பிரீமியம் ஸ்டோரி
வேலன்டைன்ஸ் டே

#Avaludan

வேலன்டைன்ஸ் டே... துணையை சந்தோஷப்படுத்த... சர்ப்ரைஸ் ஐடியாஸ்!

#Avaludan

Published:Updated:
வேலன்டைன்ஸ் டே
பிரீமியம் ஸ்டோரி
வேலன்டைன்ஸ் டே
அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் வாசகிகளிடம் சில கேள்விகள் கேட்டிருந்தோம். பலரும் ஆர்வத்துடன் தங்கள் பதில்களை கமென்ட்களாகப் பதிவு செய்திருந்தனர். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சிறந்த கமென்ட்கள் இங்கே...

BanuMiss Svm

நான் கைப்பட வரைந்த ஓவியத்தில், நானே எழுதிய கவிதையுடன் அவருக்கு ஒரு வேலன்டைன் வாழ்த்து மடல்!

Deepa Raj

அவருடைய அன்பை உணர்ந்த தருணங்களின் புகைப்படங்கள், ஒவ்வொன்றுக்கும் அந்த நினைவு குறித்த ஒரு கவிதை!

ஆசை.ஜெயச்சந்திரன்

நைட் 12 மணிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஆசைதான். ஆனா, அவங்க வீட்டுல எல்லாரும் இருப்பாங்களே..! :)

வேலன்டைன்ஸ் டே... துணையை சந்தோஷப்படுத்த... சர்ப்ரைஸ் ஐடியாஸ்!

Valli Subbiah

‘இன்றைய ஸ்பெஷல்... நான் 12 மணி நேரம் வீட்ல இருக்க மாட்டேன்... நீங்க ஃபிரீயா இருக்கலாம்’னு சிரிச்சுக்கிட்டே சொன்னா, கிஃப்ட்டே வேணாம்... மனுஷன் சந்தோஷமாயிடுவாரு! :):)

Sarasvathi Swaminathan

அவருக்கு மிகவும் பிடித்த குலாப்ஜாமுனை விளம்பரத்தில் வருவதுபோல குண்டு குண்டாக, சாஃப்டாக செய்து, அதை ஃப்ரிட்ஜில் வைத்து, சரியாக 12 மணிக்கு அவரை எழுப்பி, கேண்டில் லைட்டில் அவருக்கு அதைக் கொடுத்து இனிப்புடன் கொண்டாடுவோம்!

Gomathi Sivayam

வீட்டுச் செடியில் பூத்திருக்கும் ஒரு ரோஜாவை மாலையே பறித்து, ஃபிரிட்ஜுக்குள் வைத்து, இரவு 12 மணிக்கு அவரை எழுப்பி கூலாக, ‘அன்பரே... ஐ லவ் யூ’ என்று ஜில்லென அந்த ரோஜாவை நீட்டினால்... செம்மயில்ல?!

Mangala Gowri

இதய வடிவத்துல நானே ஒரு சின்ன கேக் செஞ்சு, அதில் எங்க ரெண்டு பேர் பெயரையும் எழுதி அலங்கரிச்சு... கட் பண்ணலாம் வாங்கனு அவரை கூப்பிடுவேன்!

Hema Venkat

நானும் அவரும் சேர்ந்து இதுவரை எடுத்துக்கிட்டதுல பெஸ்ட் போட்டோஸை எல்லாம் செலக்ட் பண்ணி, கொலாஜ் செய்து, அவருக்கு கிஃப்ட்டா கொடுத்து விஷ் பண்ணுவேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism