‘தமிழ் மண்ணில் தமிழ் மன்னரால் கட்டப்பட்ட பெரிய கோயிலுக்கு தமிழ்வழியில்தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை, தஞ்சாவூரில் வலுவடைந்திருக்கிறது. தமிழ் உணர்வாளர்களுடன் சிவனடியார்கள், சித்தர் அமைப்பினர், வள்ளலாரை வழிபடுபவர்கள் மற்றும் இந்துமத இயக்கத்தினர் எனப் பலரும் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநாடு நடத்தவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் ஆயத்தமாகிவருவதால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

பிப்ரவரி 5-ம் தேதி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில் தான் இப்படியொரு சர்ச்சை வெடித்திருக்கிறது. இதுகுறித்து கும்பகோணத்தைச் சேர்ந்த தமிழ் ஆகம அந்தணரான மெய்கண்ட சிவம் இறைநெறி இமயவன் நம்மிடம், ‘‘உலக மொழிகளிலேயே பக்திமைக் குரிய மொழி தமிழ். இறைவனை எண்ணி உருகிப் பாடப்பட்ட பாடல்கள் தமிழில்தான் அதிகம். சம்ஸ்கிருதத்தில் கோயில் வழிபாடே கிடையாது. தஞ்சை பெரிய கோயிலோ, தமிழ் ஆகமப்படி கட்டப்பட்ட சிவன் கோயில். எனவே, தமிழ் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு செய்வதுதான், சிவனுக்கு நாம் செலுத்தும் உண்மையான பக்தி.

தமிழ் மந்திரக் கோரிக்கை வைக்கும்போதெல்லாம், ‘ராஜராஜ சோழனே சம்ஸ்கிருத முறைப்படிதான் தஞ்சை பெரிய கோயிலுக்கு குடமுழுக்கு செய்தார்’ என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதற்கு எந்த ஓர் ஆதாரமும் இல்லை. இந்தக் கோயிலில் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு உள்ளிட்ட 12 திருமறைகள் ஓதி தமிழில் வழிபாடுசெய்ய, 48 ஓதுவார்களை ராஜராஜ சோழன் நியமித்ததற்கான ஆதாரம் உள்ளது. ஆகவே, தஞ்சை பெரிய கோயிலுக்கு சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்குச் செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது’’ என்றார்.

தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன்... ‘‘இந்து மதத்தில், ஒற்றைத் தலைமை கடவுளோ... ஒற்றை வழிபாட்டுமுறையோ கிடையாது. ஒவ்வொரு தெய்வத்துக்கும் மந்திரங்களும் வழிபாட்டுமுறையும் வேறுபடுவதை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று தீர்ப்பில் இதுகுறித்து தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ‘பல்வேறு வகையறா கோயில்களில் அந்தந்த ஆகமங்களின்படி அர்ச்சனை செய்து கொள்ளலாம். முறையான பயிற்சியளித்து அதற்கான அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டும்’ என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில், மகுட ஆகமப்படி கட்டப்பட்டது. இது 28 சிவநெறி ஆகமங்களைக்கொண்ட தமிழ் ஆகமம்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை, இங்கு உள்ள கோயில்களில் தமிழ் மந்திரங்களில் அர்ச்சனை செய்வதற்கான புத்தகங்களை வெளியிட்டுள்ளது. தமிழ் மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய அரசாணையும் வெளியிட்டுள்ளது. இதற்கான அனுபவம் பெற்ற ஓதுவார்கள், அர்ச்சகர்கள் ஆன்மிகப் பெரிய வர்கள் இருக்கின்றனர். சம்ஸ்கிருதம்தான் வழக்கம் எனச் சொல்லக் கூடாது. சரியானதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழ் வழியில் குடமுழுக்கு செய்ய வலியுறுத்தி, ஆன்மிகப் பெரிய வர்களும், தமிழின உணர்வாளர்களும் ஒன்றிணைந்து ஜனவரி 22-ம் தேதி மாநாடு நடத்துகிறோம். நீதிமன்றத்தையும் நாடுகிறோம். தமிழக அரசு இனியும் வாய் மூடிக்கொண்டிருந்தால் தமிழைப் புறக்கணிப்பதாகத்தான் அர்த்தம்’’ என்றார்.

பெரிய கோயில் சிவாச்சாரியார்களிடம் பேசினோம். ‘‘நாங்கள் ஒருபோதும் தமிழை எதிரியாக நினைத்தது கிடையாது. தேவாரம் ஓதியதற்குப் பிறகுதான் தீபாராதனையே காட்டு கிறோம். தமிழ், சம்ஸ்கிருதம் எல்லா மொழிகளும் கடவுளுக்கு ஒன்றுதான். ஆனால், சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்குச் செய்வதை சிலர் எதிர்க்கின்றனர். அது நியாயமல்ல. ஆகமமுறைப்படி சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு செய்வது தான் காலங்காலமாக உள்ள சம்பிரதாயம். அதை மாற்றக் கூடாது’’ என்கின்றனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், ‘‘இந்து சமய அறநிலையத் துறை என்ன சொல்கிறதோ, அந்த முறைப்படி தான் குடமுழுக்கு நடத்தப்படும். தமிழ்வழி குடமுழுக்குக் கோரிக்கையும் தமிழக அரசின் கவனத்துக்குச் சென்றுள்ளது’’ என்றார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் கருத்தறிய அவரை செல்போனில் தொடர்புகொண்டோம். அழைப்பை ஏற்ற அவரின் உதவியாளர் விவரங்களைக் கேட்டுக்கொண்டு, ‘‘அமைச்சரிடம் தெரிவிக்கிறேன்’’ என்றார். அதன் பிறகு பலமுறை தொடர்புகொண்டபோதும் அதே பதில்தான் கிடைத்தது. கடைசிவரை அமைச்சர் பேசவில்லை.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கிருஷ்ணனிடம் பேசியபோது, “இதற்கு முன்பு எந்த முறை கடைப்பிடிக்கப் பட்டதோ, அந்த முறைப்படிதான் குடமுழுக்கு நடத்துவோம். இதில் மாற்றம் செய்ய முடியாது’’ என்றார்.

தமிழ்வழி குடமுழுக்குக் கோரிக்கை விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு மெளனமாக இருப்பது அழகல்ல!