பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழ்வழி குடமுழுக்குக் கோரிக்கை மாநாடு’ ஜனவரி 22-ம் தேதி தஞ்சாவூரில் நடந்தது. ஆன்மிகவாதிகள், தமிழ் உணர்வாளர்கள், சிவனடியார்கள் என வித்தியாசமான கலவையில் மாநாடு நிறைந்திருந்தது.

தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், “தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு மறுப்பதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக விளக்கமளிக்க வேண்டும்” என்றார்.

பேராசிரியர் தா.மணி பேசும்போது, “இறைவனோடு இரண்டற கலந்த மொழி தமிழ்மொழி. எதற்கும் ஆட்படாத சிவபெருமான் தமிழுக்குத்தான் ஆட்படுவான். சிவனையும் தமிழையும் பிரிக்கவே முடியாது. தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழையும் சிவத்தையும் காப்பாற்ற சிவனடியார்கள் எறிபத்த நாயனாராக மாறிவிடுவார்கள்” என்று சீறினார்.

வழக்கறிஞர் செந்தில்நாதன், “நீதியரசர் மகாதேவனும் நீதியரசர் ஏ.கே.ராஜனும், ‘ஆகமங்கள் அனைத்தும் தமிழில்தான் இருந்தன. அவற்றை சம்ஸ்கிருதத்தில் மாற்றினர். பிறகு தமிழ் ஆகமங்கள் அழிக்கப்பட்டன’ என்று அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கின்றனர். சிவன் தந்த மொழிதான் தமிழ் என்று பாரதியார் கூறியுள்ளார். தமிழில் குடமுழுக்கு செய்வதை எதிர்ப்பவர்கள் சிவனுக்கு எதிரானவர்கள்” என்றார்.

இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் பொன்னுசாமி அடிகளார், ‘‘பெரிய கோயில், சித்தர் கருவூறாரால் வடிவமைக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு பெரிய கோயில் குடமுழுக்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது, தமிழில்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும்; வேறு மொழி நுழையக் கூடாது என எச்சரித்தோம். அதைக் கேட்காததால்தான் அசம்பாவிதம் ஏற்பட்டு 48 உயிர்கள் பறிபோயின. ஆகவே இந்த விவகாரத்தை தமிழக அரசு அலட்சியப்படுத்தக் கூடாது’’ என்றார்.

இறுதியாகப் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன். ‘‘பிப்ரவரி 1 முதல் 5-ம் தேதி வரை தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் திருமுறைகள் ஓதப்படும் என்று தமிழக அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இது ஏமாற்று வேலை. வெளியில் ஒலிபெருக்கியில் தேவாரம், திருவாசகத்தை ஒலிக்கச் செய்துவிட்டு, தமிழிலும் வழிபாடு நடைபெற்றதாக ஏமாற்றுவார்கள். இதை ஏற்க முடியாது. கருவறைக்குள் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும்; கருவறைக் கோபுரத்தின் கலசத்தில் நன்னீர் ஊற்றும்போதும் தமிழ் மந்திரங்கள் மட்டுமே ஒலிக்க வேண்டும். எந்த மொழியும் எங்களுக்கு எதிரியல்ல. ஆனால், எங்களை ஆதிக்கம் செலுத்த வந்தால் விரட்டியடிப்போம். இதுதொடர்பான வழக்கு ஜனவரி 27-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழ்வழி குடமுழுக்குக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தால், தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும்’’ என எச்சரித்தார்.