Published:Updated:

இரண்டு மாதங்களுக்கு மேல் தொடர் சிகிச்சை! - த.மா.கா மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்

ஞானதேசிகன்
ஞானதேசிகன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த ஞானதேசிகன், தமிழகத்திலிருந்து இரண்டு முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்துவந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 71.

ஞானதேசிகன்
ஞானதேசிகன்

நெஞ்சுவலி காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 11-ம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஞானதேசிகன். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறிவந்தார்.

கடந்த சில நாள்களாக உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதால், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவே மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்ற தகவல் வெளியானது. இந்தநிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஞானதேசிகன்
ஞானதேசிகன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராக இருந்த ஞானதேசிகன், தமிழகத்திலிருந்து இரண்டு முறை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் செயல்பட்டிருக்கும் இவர், 2014-ம் ஆண்டு முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்துவந்தார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு