கடந்த காலங்களில் பாரத தேசம் காணாத பஞ்சம் கிடையாது. 17-ம் நூற்றாண்டு வரை உலகப் பொருளா தாரத்தில் முதல்நிலை விவசாயப் பொருளாதாரமாக இருந்த இந்தியா, 18-19ம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷாரின் கடுமையான சுரண்டலின் காரணமாக கடுமையான பஞ்சங்களைச் சந்தித்தது. 1876-78 காலகட்டத்தில் ஏற்பட்ட மகா பஞ்சத்தால், ஆறு கோடி மக்கள் இறந்தனர். சுதந்திரத் துக்குப் பிறகும் பஞ்சங்கள் தொடர்ந்தன. 1943-ல் வங்காளப் பஞ்சம், 1966-ல் பீகார் பஞ்சம், 1970-73களில் மகாராஷ்டிரா பஞ்சம் என, பஞ்சங்களும் பட்டினிச் சாவுகளுமே அதிகரித்தன. இந்த எல்லா பஞ்சங்களிலும் அதிகம் பாதிக்கப்பட்டது சாமானிய விளிம்புநிலை மக்களே! தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் மீண்டும் ஒரு பஞ்சத்தையும் பசியையும் இந்தத் தேசம் பார்க்க வேண்டியிருக்குமோ என்கிற அச்சம் தலைதூக்கியிருக்கிறது.

21 நாள் ஊரடங்கு, தற்போது பத்து நாள்களைக் கடந்திருக்கிறது. மளிகை, காய்கறிக் கடைகள் மட்டுமே மதியம் 2 மணி வரை திறந்து இருக்கின்றன. ஊரடங்கு அமலுக்கு வந்த மறுநாளில், காய்கறிகளின் விலை இரு மடங்காக உயர்ந்தது. மளிகைப்பொருள்களின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. பருப்பு, எண்ணெய், மசாலா உள்ளிட்ட மளிகைப்பொருள்களின் உற்பத்திக்கூடங்கள் இயங்கு வதற்கு அரசு தடைவிதித்துள்ளது. உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், கடைகளிலும் கையிருப்பு காலியாகிவருகிறது. தேவை அதிகமாகவும் இருப்பு குறைவாகவும் உள்ள பொருள்களுக்கு விலை ஏற்றப்படுகிறது. வடமாநிலங்களிலிருந்து வரும் சரக்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் மற்றும் கூலித் தொழிலாளர் களுக்கு, வேலையும் ஊதியமும் இல்லாததால் அவர்களின் கையிருப்பும் குறைந்துவருகிறது. பலர் இப்போதே உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கிறார்கள். ரேஷன் கடைகளில் தரும் பொருள்கள் யானைப்பசிக்கான சோளப்பொரிதான்!

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையனிடம் பேசினோம். ‘‘அரசாங்கத்தின் கெடுபிடி காரணமாக சரக்கு வாகனங்களின் வாடகை கூடிவிட்டது. இதற்கும் சேர்த்து விலையேற்றி விற்க வேண்டியதாக உள்ளது. இதனால், வியாபாரிகளுக்கு மக்களிடம் கெட்டபெயர் ஏற்படுகிறது. அரிசி விலை கட்டுக்குள் இருக்கிறது. பருப்பு விலைதான் கிலோவுக்கு 10-15 ரூபாய் வரை ஏறியிருக் கிறது. அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, சரக்குப் போக்குவரத்துக்கான கெடுபிடிகளை விலக்க வேண்டும். பெரிய கடைகள் மூடப்பட்டுள் ளதால் சிறு கடைகளில் கூட்டம் குவிகிறது. அரசாங்கம், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதைவிட ஒழுங்குபடுத்துவதில் தான் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

பணியாளர்கள் பற்றாக்குறையால் பிஸ்கட், மிட்டாய், ஸ்நாக்ஸ் போன்றவற்றை கடைகளுக்கு சப்ளை செய்ய முடியாத டீலர்கள், வியாபாரி களையே நேரடியாக வந்து வாங்கும்படி குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். வியாபாரிகள் சென்று வாங்கி வரும்போது போக்குவரத்துச் செலவு, போலீஸ் கெடுபிடி எனப் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள், ரிஸ்க் எடுப்பதில்லை. பல பகுதிகளில் கடைகளிலும் போலீஸார் கெடுபிடி உள்ளது. வீடுகளில் டோர் டெலிவரி தர போலீஸார் கூறுகின்றனர். ஆனால், ஆள் பற்றாக்குறையால் கடைக்காரர்களுக்கு அது சாத்தியமாவதில்லை.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவிடம் கேட்டபோது, ‘‘அத்தியாவசியப் பொருள் களை வாங்கி வருவதில் காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள் ளனர். காவல்துறை மட்டுமல்ல... தாசில்தார், சுகாதாரத் துறை, உள்ளாட்சி வார்டு உறுப்பினர்களின் கமிட்டி எனப் பல்வேறு தரப்பின ருக்கும் பதில் சொல்ல வேண்டி யிருக்கிறது. இவர்களைத் தாண்டி அரசியல் தலையீடும் இருக்கிறது. காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள், வியாபாரிகளை கொச்சையாகப் பேசுகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு புகார் அளித்துள்ளோம்.

பருப்பு, எண்ணெய், மசாலாப் பொருள்கள் மில்கள், உணவுப் பொருள்கள் உற்பத்திக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றை திறக்க அனுமதிக்க வேண்டும். இந்த நிறுவனங்களின் பணியாளர் களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி உற்பத்தியைத் தொடங்க வேண்டும். இல்லை யென்றால், உணவுப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது” என்றார்.

‘‘இப்போதே நிலைமை மோசமாகிவரும் நிலையில், மேலும் சிறிதுகாலம் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பணப்புழக்கமும் குறைந்து இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கும் அபாயம் உள்ளது’’ என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இதுகுறித்து பொருளாதார நிபுணர் வ.நாகப்பன் கூறும்போது, ‘‘இந்த ஊரடங்கு காலக்கெடு இன்னும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. உயிர்ப்பாதுகாப் புக்காக எடுத்துள்ள இந்த முக்கியமான நடவடிக்கை யைப்போல் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதும் அவசியம். அதற்கு, உற்பத்தி குறையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். காய்கறி பயிரிடுவோர் வயல்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். விளைவித்த பொருள்களைக் கொண்டு செல்ல சரக்குப் போக்குவரத்து அனுமதிக்கப்பட வேண்டும். போக்குவரத்துக்கான தடையை, முதலில் மாவட்ட அளவில் நீக்க வேண்டும். அதன் பிறகு மாநில எல்லைகளில் நீக்கலாம். வெளிநாட்டு விமானப் பயணத்துக்கான அனுமதியை சில மாதங்கள் அல்லது ஓராண்டு ஆன பிறகுகூட கொடுக்கலாம்” என்றார்.

நுகர்வோர் அமைப்பான ‘பெட்காட்’டின் அறங்காவலர் பொன்னம்பலம், ‘‘வெளிமாநிலங்களிலிருந்து வரத்து இல்லை. தமிழகத்திலும் விவசாயப் பொருள்கள் அறுவடை செய்ய ஆள் இல்லாமல் வீணாகிக் கொண்டிருக்கின்றன. மளிகை உள்ளிட்ட உணவுப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தினக்கூலி வாங்குவோர் நிலைதான் பரிதாபம். ரேஷனில் தரும் பொருள்கள் போதாது. அத்தியாவசியப் பொருள்கள் மக்களின் வீடு தேடி சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.

ஆன்லைன் விற்பனை முழுவதுமாக முடக்கப்பட்டுவிட்டது. வணிக நிறுவனங்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறுவியாபாரிகளே, மக்களின் நம்பிக்கை. இவர்களிடம் சரக்குக் கையிருப்பு குறைந்து வருகிறது. மறுபுறத்தில் வேலை, கூலி இல்லாததால் மக்களிடம் காசு இல்லாத நிலை உள்ளது. சமூகரீதியான இந்த முரணை உடனே நிவர்த்தி செய்யாவிட்டால், உணவுத் தட்டுப்பாடும் அதன் தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளும் உருவாகும் வாய்ப்பு அதிகம்.

ரேஷன் பொருள்கள் கொடுப்பது தற்காலிகத் தீர்வு தான். நிரந்தரத்தீர்வு அரசின் கைகளில்தான் இருக்கிறது!

சாந்தி, உணவகம் நடத்துபவர், தேனி: “தள்ளுவண்டிக் கடை போட்டிருந்தேன். ரொம்ப நாளா முயற்சி பண்ணி கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் மாசம் 2,000 ரூபா வாடகைக்குக் கடையைப் பிடிச்சேன். கடைக்கு அட்வான்ஸ், பொருள்கள்னு ஏகப்பட்ட கடன் ஆகிடுச்சு. கடனுக்கு வட்டி கட்டிட்டு இருந்த நிலையில ஊரடங்கு போட்டதுல எல்லாம் போச்சு.’’

பழனி, பரோட்டா மாஸ்டர், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்: ‘‘ஊரடங்கு போட்டதுல மொத்தமா என் சம்பளம் முடங்கிப்போச்சு. கடன் கொடுத்தவங்களுக்கு என்ன பதில் சொல்லப்போறேன்னு தெரியலை. தூக்கமே வர மாட்டேங்குது.”

நம்பிராஜன், யாத்திரை பணியாளர், ராமேஸ்வரம்: ‘‘எங்களுக்கு ஷிஃப்ட் முறையில் மாசத்துல 15 நாள்தான் வேலை இருக்கும். அதைவெச்சு மாசம் முழுக்கக் குடும்பத்தை ஓட்டணும். இப்போ அதுக்கும் வழியில்லாமப்போச்சு. இன்னும் பத்து நாளை எப்படி ஓட்டப்போறோம்னு தெரியலை.”

பாலாஜி, வாடகை கார் டிரைவர், ராமநாதபுரம்: “வருமானம் இல்லாம வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கேன். வீட்டுல அரிசி தீர்ந்துட்டே இருக்கு. ஒரு வேளை சாப்பாட்டை கட் பண்ணிட்டோம். பட்டினிக் கிடந்து சாகுறதைவிட கொரோனா வந்தே செத்துரலாம்போல தோணுது.”

பிச்சையா, உப்பளத் தொழிலாளி, தூத்துக்குடி: ‘‘இங்க கிட்டத்தட்ட 50,000 பேர் உப்பளத் தொழில்ல இருக்காங்க. அதுல முக்கால்வாசி பேர் பெண்கள்தான். ஏப்ரல்–செப்டம்பர் வரைதான் இந்த வேலை. நாளுக்கு 340 ரூபாய் கூலி கிடைக்கும். கூலி வாங்கினாத்தான் வீட்டுல சோறு சமைப்போம். இப்போ, அந்தச் சோத்துக்கே வழி இல்லாம கிடக்கிறோம்.’’

வசந்தா, நடைபாதையில் கடை வைத்திருப்பவர், ஊட்டி: “சீஸன்ல ஊரே முடங்கிக் கிடக்குது. ஏதாவது வித்தாத்தான் குடும்பத்தோடு சாப்பிட முடியும். நாளை பொழுதுக்கு சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.’’

பெரியமுத்து, சாலையோர வியாபாரி, கோயம்புத்தூர்: ‘‘இதுல வர்ற வருமானத்துலதான் அரை வயித்துக்காவது கஞ்சி குடிச்சோம். இப்போ, சுத்தமா வருமானம் இல்லை. என் பையன் ஆட்டிசம் நோயால பாதிக்கப்பட்டவன். ரொம்பக் கஷ்டமா இருக்கு. ரேஷன் கடையில கிடைக்கிற இலவசப் பொருளுக்காகக் காத்திருக்கோம். அதுவும் கிடைக்கலைன்னா நாங்க மூணு பேரும் பட்டினிதான்.’’

சுதன், சுற்றுலா வழிகாட்டி, கன்னியாகுமரி: ‘‘குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுக்கக்கூட கையில காசு இல்லை. ரேஷன்ல அரிசி கிடைக்குது. ஆனா, நல்ல சாப்பாடுக்கு பிள்ளைங்க ஏங்குது. ஸ்கூல் இருந்தா அவங்களுக்கு சத்துணவுத் திட்டத்துல முட்டையோடு சாப்பாடு கிடைச்சுடும். பத்து நாள்லயே பெரும்பாடாயிருச்சு. இன்னும் பத்து நாளை நினைச்சா பகீர்னு இருக்கு.’’

சாந்தி, விவசாயக் கூலித்தொழிலாளி, சேலம்: “காட்டு வேலைக்குப் போனா 150 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அவசரத்துக்கு சேர்த்துவெச்ச 1,000 ரூபாவுல 900 ரூபா காலி. ரேஷன் கடையில 1,000 ரூபாய் எப்போ கொடுப்பாங்கனு காத்திட்டிருக்கேன். அந்தப் பணம் கிடைச்சாதான் அடுத்த வாரத்தை ஓட்ட முடியும். இல்லைன்னா பட்டினிதான்.”

சந்திரா, தையல் கலைஞர், திருநெல்வேலி: “என் கணவர், மகன், நானு மூணு பேருக்குமே கூலி வேலைதான். இப்போ மூணு பேருக்கும் வேலை இல்லை. தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் கடன் வாங்கிட்டோம். ஊரடங்கு முடிஞ்சாலும் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க எவ்வளவு நாள் கஷ்டப்படணும்னு தெரியலை.’’

தங்ககிருஷ்ணன், ஆட்டோ ஓட்டுநர், திருநெல்வேலி: “வருமானம் இல்லாம வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கிறோம். ரேஷன் அரிசியை வெச்சு சாப்பிடுறோம். பிள்ளைக்கு பால், பிஸ்கட் வாங்கக்கூட வழியில்லை. இன்னும் பத்து நாளை எப்படிச் சமாளிக்கப்போறோம்னு தெரியலை.”

முருகன், கட்டடத் தொழிலாளி, நாகப்பட்டினம்: “எனக்கு காது கேட்காது, பேச முடியாது (எழுதிக்காட்டித்தான் தகவல்களைப் பகிர்கிறார்). சென்னையில கட்டட வேலை செய்றேன். வேலை இல்லாததால வருமானமில்லை. என் மனைவி, குழந்தை பெத்துக்கிறதுக்காக தாய் வீட்டுக்குப் போயிருக்கா. பெண் குழந்தை பிறந்திருக்கிறதா செய்தி வந்துச்சு. செலவுக்குக் காசு இல்லாததால போய்ப் பார்க்க முடியாம இருக்கேன்.”

‘உணவுப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பது?’ என்பது பற்றி, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரெங்கநாதனிடம் கேட்டோம். ‘‘சிறுதானியங்களை, குறைந்த அளவு சமைத்தாலே அதிகம் பேர் உண்ணலாம். பசியெடுக்க நேரமாகும். சத்தும் அதிகம். வீட்டுத்தோட்டக் காய்கறிகளை அதிகம் பயன்படுத்தலாம். சீஸன் பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். பாலில் டீ, காபி போடுவதைக் குறைத்துக்கொண்டு, நெய், வெண்ணெய் வீட்டில் தயாரிக்கலாம். மூன்று வேளையும் சாதம் என்பதைக் குறைத்துக்கொண்டு, ஒருவேளை சாதம், ஒருவேளை பழங்கள், கீரைகள் எனப் பழகிக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

ஒடிசாவில், ஏப்ரல் 3-ம் தேதி வரை வெறும் ஆறு பேர்தான் கொரோனா வைரஸால் பாதித்துள்ளனர்! பிரதமர் ஒரு நாள் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே அலர்ட் ஆகிவிட்டது ஒடிசா அரசு. முதல்வர் நவீன் பட்நாயக், பேரிடர் சட்டம் நடைமுறைக்கு வருவதாக மார்ச் 13-ம் தேதி சட்டசபையில் அறிவித்தார். வெளிநாடுகளிலிருந்து ஒடிசாவுக்குள் நுழைந்தவர்களை ஆப் மூலம் ஒருங்கிணைத்து, தனிமைப்படுத்தினர். அனைத்துக் குடும்பங்களுக்கும் நான்கு மாதங்களுக்குரிய அரிசி முன்கூட்டியே வழங்கப்பட்டது. முதியோர் உதவித்தொகையும் முன்கூட்டியே வழங்கப்பட்டது. ஒடிசா முதல்வரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தனிச்செயலாளர் வி.கார்த்திகேய பாண்டியன், தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் படை, கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கின்றன.

கேரளாவும் கொரோனாவை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது. தொடக்கத்தில் சிறுசிறு தடுமாற்றங்களைச் சந்தித்தாலும், முதல்வர் பினராயி விஜயன் எடுத்த உறுதியான நடவடிக்கைகளால், உயிரிழப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைவருக்கும் ஒரு மாதத்துக்குரிய ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அவசர காலத்தில் மருந்துகள், உணவுகளை எடுத்துச் செல்லவும், பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்யவும் ஹெலிகாப்டர் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குவங்கமும் கொரோனா தடுப்புப் பணிகளைச் சிறந்த முறையில் மேற்கொண்டுவருகிறது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொரோனா தடுப்புப் பணிகளில் நேரடியாகவே களம் இறங்கி, அத்தியாவசியப் பொருள்களின் இருப்புகளை உறுதிசெய்கிறார். மார்க்கெட் பகுதிகளுக்கு நேரில் சென்று ’அதிக அளவில் கூட வேண்டாம்’ என்று மக்களை அன்பாக எச்சரிக்கிறார். மருத்துவமனைகளுக்குச் சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிகிறார். டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காப்பீட்டுத் திட்டத்தையும் தொடங்கியிருக்கிறார்.