Published:Updated:

இயற்கை மருத்துவர்களை புறக்கணிக்கிறதா தமிழ்நாடு அரசு?

யோகா
பிரீமியம் ஸ்டோரி
யோகா

பகுதி நேர யோகா பயிற்சியாளர் நியமனத்தில் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று துறை சார்பில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

இயற்கை மருத்துவர்களை புறக்கணிக்கிறதா தமிழ்நாடு அரசு?

பகுதி நேர யோகா பயிற்சியாளர் நியமனத்தில் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று துறை சார்பில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

Published:Updated:
யோகா
பிரீமியம் ஸ்டோரி
யோகா

தமிழ்நாட்டிலுள்ள நலவாழ்வு மையங்களில், ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் மூலம் பகுதி நேர யோகா பயிற்சியாளரை நியமிக்க தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுக்க 48 இடங்களில் பகுதி நேர யோகா பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நியமனத்தில், இயற்கை மற்றும் யோகா மருத்துவம் படித்த மருத்துவர்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது!

இயற்கை மருத்துவர்களை புறக்கணிக்கிறதா தமிழ்நாடு அரசு?

இதுகுறித்து, இந்திய இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரி மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர், மருத்துவர் சௌந்தரபாண்டியனிடம் பேசினோம். ``தமிழ்நாட்டில் இரண்டு அரசுக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 20 இயற்கை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கல்லூரிகளில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படித்த 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருக்கிறார்கள். அரசு அறிவிப்பிலேயே `இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் (Bachelor of Naturopathy and Yogic Sciences-BNYS) படித்த மாணவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். அவர்கள் இல்லையெனும்பட்சத்தில் ஆயுஷ் வழிகாட்டுதல்படி மற்றவர்களைப் பணியமர்த்தலாம்’ என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. அறிவிக்கப்பட்ட 48 பகுதி நேர யோகா பயிற்சியாளர் இடங்களுக்கும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்துக்கும் மேற்பட்ட இயற்கை மருத்துவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும், அவர்கள் யாருக்கும் வேலை கொடுக்காமல், ஆறு மாதங்கள் முதல் ஒருசில வருடங்கள் மட்டும் யோகா கோர்ஸ் படித்தவர்களுக்கு மாவட்டச் சித்த மருத்துவ ஆணையர் பணி வழங்கியிருக்கிறார். இந்த அரசு, திட்டமிட்டு இயற்கை மருத்துவர்களைப் புறக் கணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்படிச் செய்திருக்கிறது. ஐந்தரை வருடங்கள் இயற்கை மருத்துவத் தையும், யோகாவையும் படித்த எங்களைத் தவிர்த்துவிட்டு, வேறும் உடற்பயிற்சியாக யோகா பயின்ற மற்றவர் களை நியமிப்பது எப்படி நியாயமாகும்... பள்ளிகளில் யோகா சொல்லிக்கொடுப்பது வேறு, மருத்துவமனை களில் யோகா சொல்லிக்கொடுப்பது வேறு. உடற் பயிற்சி வேறு; மருத்துவம் வேறு. அங்கே வரும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரைநோய் உள்ளவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான யோகா கற்றுத்தர வேண்டும். இதில் ஏதாவது தவறு நடந்து, யாராவது பாதிக்கப்பட்டால் அது இந்த அரசுக்குத்தான் கெட்ட பெயரை ஏற்படுத் தும். கூடவே, யோகா பயிற்சியாளரால்தான் பாதிப்பு என்று செய்தி வரும். இது அனைத்து இயற்கை மருத்துவர்களையும் பாதிக்கும். இது போன்ற தவறு நடக்காமலிருக்க ஐந்தரை ஆண்டுகள் முறைப்படி படித்த எங்களை நியமிக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றோம்” என்றார்.

சௌந்தரபாண்டியன்
சௌந்தரபாண்டியன்
செந்தில்குமார்
செந்தில்குமார்

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மருத்துவத்துறைச் செயலாளர் செந்தில்குமாரிடம் பேசினோம். ``பகுதி நேர யோகா பயிற்சியாளர் நியமனத்தில் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று துறை சார்பில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்கிறது என்று உடனடியாகத் துறைரீதியான விசாரணை நடைபெறும். ஒருவேளை தவறு நடந்திருந்தால், அது கண்டிப்பாகச் சரிசெய்யப்படும்” என்றார்.

தகுதியுள்ளவர்களைப் புறக்கணிப்பது நியாயமல்ல!