Published:Updated:

Tamil News Today: தமிழ்நாடு ஊரடங்கு தளர்வுகளுடன் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

16-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

16 Jul 2021 7 PM

Tamil News Today: தமிழ்நாடு ஊரடங்கு தளர்வுகளுடன் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்!

திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tamil News Today: தமிழ்நாடு ஊரடங்கு தளர்வுகளுடன் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்!
Tamil News Today: தமிழ்நாடு ஊரடங்கு தளர்வுகளுடன் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழத்தில் தளர்வுகளுடன்கூடிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

16 Jul 2021 3 PM

தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றார் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட அண்ணாமலை, இன்று சென்னை கமலாலயத்தில் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநில பாஜக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, `தமிழகத்தில் பாஜக-வை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வேன்’ என்றும், `பாஜக தலைமை எனக்கு வழங்கிய பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன்’ என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, `தமிழகத்துக்குக் கூடுதல் தடுப்பூசிகள் வழங்குமாறு தமிழக பாஜக வலியுறுத்தும்’ என்றும், `கடைக்கோடி மனிதனுக்கும் அங்கீகாரம் வழங்கும் கட்சி பாஜக. கிராமத்தில் பிறந்த எல்.முருகனை இணையமைச்சர் ஆக்கியதுதான் உண்மையான சமூக நீதி’ என்றும் குறிப்பிட்டார். `நீட்தேர்வு வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. கிராமப்புற மாணவர்களுக்கு நீட் என்பது கட்டாயம் தேவை’ என்று அவர் தெரிவித்தார்.

16 Jul 2021 3 PM

``மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை!”

Tamil News Today: தமிழ்நாடு ஊரடங்கு தளர்வுகளுடன் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்!

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக டெல்லி புறப்பட்டு சென்ற தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் குழு இன்று மத்திய நீர் வளத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசியது. மத்திய அமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ``மத்திய அரசின் நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை’’ எனவும், ``மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை’’ என்றும் தெரிவித்தார்

16 Jul 2021 3 PM

`நீட் தேர்வு குறித்து மறுபரீசிலனை செய்ய வேண்டும்!’ 

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்றுக் குறைந்திருந்தாலும் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக, ஆறு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்திவருகிறார். இதில் பங்கேற்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் நீட் தொடர்பாகவும், தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பாகவும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

Tamil News Today: தமிழ்நாடு ஊரடங்கு தளர்வுகளுடன் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின், ``பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் தேர்வு நடத்துவது, கொரோனா பரவ வழிவகுக்கும். ஆகவே நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்தும் முடிவை நீங்கள் மறுபரீசிலனை செய்ய வேண்டும்” என்றார். மேலும் ``தமிழ்நாட்டுக்கென ஒதுக்கப்படும் தடுப்பூசியின் அளவு, மிகக்குறைவாக உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ஏற்கெனவே கோரியிருந்ததைபோல ஒரு கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

16 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 38,949 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,10,26,829 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 542. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,12,531 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,01,83,876 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,30,422 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 40,026 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 39,53,43,767 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 38,78,078 டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு