Published:Updated:

Tamil News Today: இந்தியாவில் 4 லட்சத்தை நெருங்கும் மொத்த மரணங்களின் எண்ணிக்கை! - கொரோனா நிலவரம்

டெல்டா ப்ளஸ் கொரோனா
டெல்டா ப்ளஸ் கொரோனா

01-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

01 Jul 2021 1 PM

நெகிழவைத்த விஜய் ரசிகர்கள்!

சப் கலெக்டருடன் விஜய் மக்கள் இயக்கத்தினர்
சப் கலெக்டருடன் விஜய் மக்கள் இயக்கத்தினர்
ம.அரவிந்த்

பட்டுக்கோட்டையில் நடிகர் விஜய் பிறந்தநாளுக்காக, அவரின் ரசிகர்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு பெரிய சைஸிலான நிழற்குடையை வழங்கி நெகிழவைத்திருக்கிறார்கள். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் இந்தச் செயலை சப் கலெக்டர் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.

செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்
செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்

தற்போது ஒன்பது செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கும், காய்கறி விற்கும் மூதாட்டி ஒருவருக்கும் குடை வழங்கப்பட்டுள்ளது. குடையைப் பெற்றுக்கொண்ட செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், ``எத்தனையோ கட்சிகள் இருக்கு... ஆனா, யாரும் இதுவரை எங்களைக் கண்டுகொண்டதே இல்லை. நீங்க எங்களைத் தேடி வந்து, என்ன தேவைன்னு கேட்டு, குடை கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும் என்பதை அறிந்து குடை கொடுத்துருக்கீங்க. ஓரளவுக்கு மழை மற்றும் வெயிலிலிருந்து எங்களைக் காத்துக்கொள்ள இந்தக் குடை உதவும்’’ என நெகிழ்ந்து நன்றி கூறியதாகத் தெரிவித்தார்கள்.

- குணசீலன்

01 Jul 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 48,786 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,04,11,634 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,005. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,99,459-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,94,88,918-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 5,23,257 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 61,588 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 33,57,16,019 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன!

01 Jul 2021 9 AM

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

சமையல் எரிவாயு
சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயர்ந்துள்ளது. வணிகரீதியான எரிவாயு சிலிண்டர் மீதும் ரூ.84.50 விலை உயர்ந்து, சிலிண்டர் ரூ.1,687.50ஆக விலையேற்றப்பட்டுள்ளது. இந்தப் புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

01 Jul 2021 8 AM

கொரோனாவுக்குப் பிந்தைய நல்வாழ்வு மையம் திறப்பு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. அதன் காரணமாக தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு, `கொரோனாவுக்குப் பிந்தைய நல்வாழ்வு மையம் தமிழகத்தில் திறக்கப்படும்’ என்று அறிவித்திருந்தத்து. அதன்படி கொரோனாவுக்குப் பிந்தைய நல்வாழ்வு மையக் கட்டடம் மற்றும் பன்னாட்டு தடுப்பூசி மையத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் திறந்துவைக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ரங்கராஜன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு