Published:Updated:

Tamil News Today: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார்!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

01-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

01 Sep 2021 9 AM

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார்!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டதாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

01 Sep 2021 8 AM

தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.902.50

மானிய விலை சிலிண்டர், விலை உயர்வு!
மானிய விலை சிலிண்டர், விலை உயர்வு!

தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.902.50-க்கு விற்கப்படுகிறது. சிலிண்டர் ஒன்றின் விலை 875 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.285-ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலையேற்றம் மக்களை அதிகம் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. வணிக அளவில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை ரூ.75 உயர்ந்து ரூ.1,831-க்கு விற்கப்படுகிறது.

01 Sep 2021 8 AM

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்!

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. நடுவில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் பள்ளி மாணவர்களுக்கும், செமஸ்டர் தேர்வுகளுக்காக கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நோய்த் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவந்ததால் கல்வி நிலையங்கள் மீண்டும் மூடப்பட்டன. தற்போது நோய்ப் பரவல் சற்று குறைந்ததைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

பள்ளி மாணவர்கள் (மாதிரி படம்)
பள்ளி மாணவர்கள் (மாதிரி படம்)

அதன்படி, பள்ளிகளில் 9, 10, 11 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 50% மாணவர்களுடன் சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெறும். கல்லூரிகளைப் பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சிமுறையிலும், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாள்களிலும் வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக பள்ளி, கல்லூரிகளில் செய்யப்பட்டுவந்தன. தமிழகத்தைப் போன்று இன்று புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படவிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு