Published:Updated:

Tamil News Today: கூடியது அதிமுக செயற்குழு! - தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்!

அதிமுக செயற்குழு
Live Update
அதிமுக செயற்குழு

01-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

01 Dec 2021 11 AM

அதிமுக-வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்!

தமிழ்மகன் உசேன்
தமிழ்மகன் உசேன்

அதிமுக -வின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவராகச் செயல்பட்டுவந்த மதுசூதனன் அண்மையில் மறைந்ததைத் தொடர்ந்து, அடுத்த அவைத்தலைவர் யார் என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் அதிமுக-வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

01 Dec 2021 8 AM

இன்று அதிமுக செயற்குழுக் கூட்டம்..!

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உட்கட்சி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டம் முடிந்த பின்னர், அதிமுக செயற்குழுக் கூட்டம் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது. அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு, உட்கட்சித் தேர்தல் ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS