Published:Updated:

Tamil News Today: மனைவி, 2 குழந்தைகளை கொன்று வங்கி ஊழியர் தற்கொலை! - சென்னையில் அதிர்ச்சி

தற்கொலை
Live Update
தற்கொலை

02-01-2022 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

02 Jan 2022 5 PM

மனைவி, 2 குழந்தைகளை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை!

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் மணிகண்டன். தனியார் வங்கி ஊழியரான இவர், கடந்த இரண்டு மாதகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் தனது நணர்களிடத்தில் பல லட்சம் ரூபாய், கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

கொலை
கொலை

இந்த நிலையில் கடன் பிரச்னை காரணமாக, இன்று தனது மனைவி பிரியா, குழந்தைகள் தரன்(10), தாஹன் (1), ஆகியோரை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சென்ற துரைப்பாக்கம் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்னையே இந்த கொலை தற்கொலைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

02 Jan 2022 12 PM

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

 சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தேனி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை இருக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனவும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
02 Jan 2022 11 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!

புத்தாண்டு தினமான நேற்று சிவகாசியில் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சிவகாசி அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்திலிருக்கும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே, வெடி விபத்தில் பலியானவர்களின் குடுப்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மேலும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

02 Jan 2022 9 AM

மீண்டும் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை!

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள்
கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள்

2022 -ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 5-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.