Published:Updated:

Tamil News Today: `இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 21 போராளிகளுக்கு மணிமண்டபம்!’ - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

02-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

02 Sep 2021 10 AM

`இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 21 போராளிகளுக்கு மணிமண்டபம்!’

ஸ்டாலின்
ஸ்டாலின்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ``விழுப்புரம் மாவட்டத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 21 போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். விழுப்புரத்தில் 1987-ல் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த 21 பேருக்கு ரூ. 4 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதுதான் திராவிடக் கொள்கை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு