Published:Updated:

Tamil News Today: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா காலமானார்! - பிறந்தநாளில் சோகம்

02-10-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

02 Oct 2021 8 AM

வீரபாண்டி ராஜா காலமானார்!

வீரபாண்டி ராஜா
வீரபாண்டி ராஜா

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா சற்றுமுன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தனது பிறந்தநாளான இன்று, சேலத்தில் தந்தையின் சிலைக்கு மாலையிட்டு திரும்பும்போது, திடீரென மயங்கி விழுந்த அவரை உடனிருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது!

02 Oct 2021 7 AM

காந்தியடிகளின் 153-வது பிறந்தநாள்! - நினைவிடத்தில் மரியாதை

இன்று தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 153-வது பிறந்தநாள். டெல்லியிலுள்ள அவரின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பிரதமர் மோடியும் காந்தியடிகளின் நினைவிடத்துக்கு வந்து, மலர் தூவி மரியாதை செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் எனப் பலரும் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்துவருகிறார்கள்.

02 Oct 2021 7 AM

தமிழகத்தில் இன்று கிராமசபைக் கூட்டம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு இன்று, காந்தி ஜயந்தியை முன்னிட்டு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மேலும் தென்னிந்தியாவிலுள்ள ஒரே காந்தி அருங்காட்சியகமான மதுரை காந்தி அருங்காட்சியகத்துக்கு இதுவரை முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். அந்த வரிசையில் நான்காவது முதலமைச்சராக ஸ்டாலின் வருகை தரவிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு