Published:Updated:

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை!

தற்கொலை
Live Update
தற்கொலை

02-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

02 Dec 2021 6 PM

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை!

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாசலம், சென்னையில் இன்று தற்கொலை செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெங்கடாசலத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவர் மேல் எழுந்த புகாரின் பேரில் சோதனை நடத்தினார்கள்.

வெங்கடாசலம் தற்கொலை
வெங்கடாசலம் தற்கொலை

அந்த சோதனையின் போது, ரூ.13.50 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைப்பற்றினார்கள். அவர் மீது வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில், இன்று வெங்கடாசலம் அவரின் சென்னை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

02 Dec 2021 4 PM

இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு!

விமான நிலையம்
விமான நிலையம்
மாதிரி படம்

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று, தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது எனவும் டெல்டாவைவிட ஐந்து மடங்கு வேகமாக பரவக்கூடியது ஒமிக்ரான் வகை வைரஸ் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பிய இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை மீறிச் செயல்பட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை 29 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
02 Dec 2021 11 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிசம்பர் 7-ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்!

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என விதியில் திருத்தம் செய்யப்பட்டு சிறப்பு தீர்மானம் நி்றைவேற்றப்பட்டது. இந்த நிலையில், வரும் டிசம்பர் 7-ம் தேதி ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்து ஐந்து ஆண்டுகள் ஆன உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதியான அடிப்படை உறுப்பினர்களாகக் கருதப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

02 Dec 2021 8 AM

``தமிழ்நாட்டில் யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை!” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உலகம் முழுவதும் ஒமிக்ரான் வேரியன்ட் கொரோனா பரவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழ்நாட்டில் இதுவரையில் யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வந்த 477 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. விமானப் பயணிகள் யாருக்காவது கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனி அறையில் வைத்து சிகிச்சை வழங்கப்படும். ஒமிக்ரான் பாதிப்பை ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் மூலமும் கண்டறியலாம்” என்றார்.

02 Dec 2021 8 AM

தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுபெற்றது!

மழை
மழை

வங்கக் கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுபெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தாழ்வு மண்டலமாக வலுபெற்ற பின்னர் அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும். இந்த ஜாவத் புயல், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.