Published:Updated:

துப்பாக்கி பயிற்சியின் போது தலையில் குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன்; சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்!

உயிரிழந்த சிறுவன்
Live Update
உயிரிழந்த சிறுவன்

03-01-2022 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

03 Jan 2022 6 PM

துப்பாக்கி பயிற்சியின் போது தலையில் குண்டு பாய்ந்த காயமடைந்த சிறுவன்; சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்!

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில், கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி, 25-க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பயிற்சியின்போது, ஒரு வீரர் சுட்ட தோட்டா ஒன்று, அங்கிருந்து, சுமார் 2 கி.மீ தொலைவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீட்டுக்கு வெளியே இருந்த புகழேந்தி (11) என்ற சிறுவன் தலையில் பாய்ந்ததில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிரிழந்த சிறுவன்
உயிரிழந்த சிறுவன்

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் தலைப் பகுதியிலிருந்த தோட்டாவை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார்கள். அதைத் தொடர்ந்து, சிறுவன் மிகவும் அபாய நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்தான். இந்த நிலையில், சற்று நேரத்துக்கு முன்பு சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். சிறுவனின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குளாக்கியிருக்கிறது.

03 Jan 2022 11 AM

``ஒமைக்ரானிலிருந்து நம்மைத் தடுக்கும் கேடயம் முகக்கவசம்!”

சிறார்களுக்கான தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின், ``ஒமைக்ரானிலிருந்து நம்மைத் தடுக்கும் கேடயம் முகக்கவசம் என்பதால் அனைவரும் அணிய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
03 Jan 2022 9 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய வீரமங்கை ராணி வேலுநாச்சியாரை வணங்கி மகிழ்கிறேன்’ - மோடி

பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வதாகத் தெரிவித்திருக்கிறார். ``அவரது வீரமும் துணிச்சலும் எதிர்காலத் தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்து போராடிய அவரின் ஆளுமை வியப்புக்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

03 Jan 2022 9 AM

அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கண்டிக்கும் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர்!

அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கண்டித்து தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் அவர் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்திவருகிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த டாஸ்மாக் பார் ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக இந்தச் சங்கத்தினர் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெண்டர் எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.