Published:Updated:

Tamil News Today: `அதிமுக-வில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்ட விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆஜராக சம்மன்!

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்

03-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

03 Aug 2021 3 PM

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆஜராக சம்மன்!

அ.தி.மு.க-பன்னீர் செல்வம் - பழனிசாமி
அ.தி.மு.க-பன்னீர் செல்வம் - பழனிசாமி

அதிமுக-வில் இருந்து தான் நீக்கப்பட்டதை எதிர்த்து பெங்களூரு புகழேந்தி வழக்கு தொடுத்திருந்தார். தன்னை கட்சியில் இருந்து நீக்கியது கட்சிக்கு விரோதமான செயல் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் எம்.பி , எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், வரும் 24-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது.

03 Aug 2021 12 PM

`தமிழ்நாட்டை பிரிக்கும் திட்டமில்லை..!’

Tamil News Today: `அதிமுக-வில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்ட விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆஜராக சம்மன்!
03 Aug 2021 11 AM

`எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அவமதிக்கின்றன!’ - பிரதமர் மோடி

பெகாசஸ் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருவதால், மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கிவருகிறது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

இந்தநிலையில், இன்று காலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனையில் ஈடுபட்டன. கூட்டம் முடிந்து காங்கிரஸ் எம்.பி-யும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, சைக்கிளில் நாடாளுமன்றத்துக்குப் புறப்பட்டார். இதற்கிடையே, பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். பா.ஜ.க எம்.பி-கள் கூட்டத்தில் பேசிய மோடி, ``எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அவமதிக்கின்றன. அவையைச் செயல்படவிடாமல் தடுக்கின்றன” என்றார்.

03 Aug 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 30,549 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,17,26,507 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 422. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,25,195-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா ஆக்சிஜன் படுக்கைகள்
கொரோனா ஆக்சிஜன் படுக்கைகள்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,08,96,354 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,04,958 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 38,887 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 47,85,44,114 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 61,09,587 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது!

03 Aug 2021 9 AM

அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

நிலநடுக்கம்!
நிலநடுக்கம்!

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இன்று காலை 9:10 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இன்று காலை 6 மணி அளவில் போர்ட்பிளேயரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு