Published:Updated:

Tamil News Today: மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது; தமிழகம் நோக்கி நகரும்! - இந்திய வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
Live Update
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

03-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

03 Dec 2021 8 AM

மேலும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் வங்கக் கடலில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி தமிழகம் நோக்கி நகரும் எனத் தெரிவித்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம், அது வலுப்பெறுவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் தெரிவித்திருக்கிறது.

03 Dec 2021 8 AM

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

மழை
மழை

அந்தமானில் உருவான குறைந்தத் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, ஒடிசா நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
03 Dec 2021 8 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த நபருக்கு கொரோனா!

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த தஞ்சையைச் சேர்ந்த நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்யப்படவிருக்கிறது. இது தொடர்பாகப் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ``சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அது ஒமிக்ரான் வகை வைரஸா என்பது ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும்” எனத் தெரிவித்திருக்கிறார்.