Published:Updated:

Tamil News Today: ``அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டன!" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Live Update
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

04-01-2022 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

04 Jan 2022 11 AM

`அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டன!'

தமிழ்நாட்டின் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் தங்களை, தங்களது இல்லத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

தொடர்ந்து அம்மா கிளினிக்குகள் தொடர்பாகப் பேசிய அவர், ``அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா கிளினிக்குகள் செவிலியர்கள் இல்லாமல் செயல்படாமலேயே இருந்துவந்தன. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டன. ஓராண்டு அடிப்படையில் தற்காலில அமைப்பாகத்தான் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அம்மா மினி கிளினிக்குகளுக்கு நியமிக்கப்பட்ட 1,820 மருத்துவர்களும் கொரோனா பணியில் உள்ளனர். தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 1,820 மருத்துவர்களும் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை பணியில் ஈடுபடுவார்கள்” என்றார்.

04 Jan 2022 9 AM

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..! 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்று ஒரே நாளில் 37,379 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது இந்தியாவில் 1,71,830 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 11,007 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போன்று ஒரே நாளில் 124 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

மேலும், இந்தியாவில் 1,46,70,18,464 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 19.69 கோடி டோஸ் மாநிலங்களில் கையிருப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகையும் 1,892-ஆக அதிகரித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS