Published:Updated:

Tamil News Today "ஒன்றிய அரசு கொரோனா தடுப்பூசிகளை இன்னும் முழுமையாக வழங்கவில்லை"- முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

04-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

04 Jul 2021 7 PM

"ஒன்றிய அரசு கொரோனா தடுப்பூசிகளை இன்னும் முழுமையாக வழங்கவில்லை". - முதல்வர் ஸ்டாலின் 

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த காணொளியில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, "எந்த அலையையும் தாங்கும் வல்லமை தமிழக அரசுக்கு உள்ளது. தமிழக மக்களுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது என அறிவேன்.கொரோனாவைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்று சொல்லாமே தவிர முழுமையாக ஒழிக்கவி்ல்லை. விதிமுறைகளைக் கடைபிடிப்பதில் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் நாம் விதிமுறைகளைப் பின்பற்றத் தேவையில்லை என நினைக்கக்கூடாது. திரையரங்குகள், பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை இன்னும் திறக்கவி்ல்லை. அது ஏன் என்ற காரணத்தை மக்கள் உணர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் முழுமையாக தடுப்பூசி செலுத்தவில்லை. ஒன்றிய அரசு கொரோனா தடுப்பூசிகளை இன்னும் முழுமையாக வழங்கவில்லை. முழுமையான அளவுக்கு தடுப்பூசி கிடைக்காததால் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். " என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

04 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 43,071 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. நேற்று முன்தினம் 46,617, நேற்றைய தினம் 44,111 என கொரோனா பாதிப்பு இருந்தது. நேற்று ஒரே நாளில் 52,299 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,96,58,078 -ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 955. கொரோனா தொற்றுக்குள்ளாகி தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 4,85,350 ஆக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு