Published:Updated:

Tamil News Today: `உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடுதல் அவகாசம் வேண்டும்!’ -உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

04-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

04 Sep 2021 8 AM

உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் அவகாசம் கேட்டு மனு!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனு அளித்திருக்கிறது. ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் ஆறு மாத அவகாசம் கோரப்பட்டுள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு