Published:Updated:

Tamil News Today: எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி!

04-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

04 Nov 2021 11 AM

எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளியை அவர் காஷ்மீரில் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் கொண்டாடினார், எல்லை பணியில் உயிர் நீத்த விரர்கள் நினைவிடத்தில் மரியாதை செய்தார். தொடர்ந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை வழக்கமாக கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

04 Nov 2021 8 AM

கலால் வரி குறைப்பு...இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணையம் செய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் டீசல் விலையும் சதமடித்தது. இதன் காரணமாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ. 5-ம், டீசல் மீதான கலால் வரியில் ரூ.10-ம் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள்

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 5.26 குறைந்து ரூபாய்.101.40-க்கு விற்பனை செய்யபடுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 11.16 குறைந்து ரூபாய் 91.43-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு