Published:Updated:

Tamil News Today: `இந்தியாவில் 40,000-க்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு!’ - கொரோனா நிலவரம்

கொரோனா ரிசல்ட் வாங்கக் காத்திருக்கும் பொதுமக்கள்
கொரோனா ரிசல்ட் வாங்கக் காத்திருக்கும் பொதுமக்கள்

05-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

05 Jul 2021 8 AM

புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை, தொடர்ந்து அதிகரித்து வந்தபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மே மாதம் 24-ம் தேதி அமைபடுத்தப்பட்ட முழு ஊரடங்குக்குப் பின்னர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. அதன் பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு குறைவான மாவட்டங்கள், அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என வகை வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன,

ஊரடங்கு
ஊரடங்கு

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்துவருவதால், ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் புதிய தளர்வுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தன. 12 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில், இ பாஸ், இ பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. ஹோட்டல்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மாவட்டத்துக்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பஸ் போக்குவரத்து, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரடங்கு: `டாஸ்மாக் முதல் போக்குவரத்து வரை!' - கூடுதல் தளர்வுகள் என்னென்ன?
05 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 39,796 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,05,85,229 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 723. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,02,728-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,97,00,430-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,82,071 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 42,352 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 35,28,92,046 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன!

அடுத்த கட்டுரைக்கு