Published:Updated:

Tamil News Today: முல்லைப் பெரியாறு அணையில் அமைச்சர் துரைமுருகன் உட்பட 4 அமைச்சர்கள் ஆய்வு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முல்லைப் பெரியாறு அணையில்  துரைமுருகன் ஆய்வு!
முல்லைப் பெரியாறு அணையில் துரைமுருகன் ஆய்வு!

05-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

05 Nov 2021 12 PM

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்பட 4 அமைச்சர்கள் ஆய்வு!

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேரளாவின் தேக்கடியில் உள்ள படகுத் துறைக்கு 11.30 மணிக்கு சென்றார். அங்கிருந்து படகில் பயணம் செய்து முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்றுள்ளார்.

அவருடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வணிக வரித்துறை அமைச்சா் மூர்த்தி, எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார், மதுரை வடக்கு தளபதி, சோழவந்தான் வெங்கடேஷ், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

- கார்த்திக்

05 Nov 2021 9 AM

கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கேதார்நாத் சிவன் கோயிலில் வழிபாடு செய்தார். நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய அவர் இன்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். 2013-ம் ஆண்டு பெரு மழை காரணமாக வந்த வெள்ளத்தில் சேதமடைந்த ஆதி சங்கரர் சமாதி, புனரமைப்பு பணிகளுக்கு பின் பிரதமர் திறந்து வைத்தார், இதுதவிர கேதார்நாத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கட்டுமான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்னார். அடுத்தாண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உத்தராகண்ட் மாநிலமும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு