Published:Updated:

Tamil News Today: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி!

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

06-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

06 Aug 2021 1 PM

தரங்கம்பாடி: அரசுப் பேருந்தில் திடீர் தீ விபத்து!

மயிலாடுதுறையிலிருந்து புதுச்சேரி அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றிருக்கிறது. பேருந்தை டிரைவர் செந்தில் (வயது 40) என்பவர் ஓட்டியிருக்கிறார். நடத்துநராக பரசுராமன் (வயது 46) என்பவர் பணியாற்றியிருக்கிறார். 8 மணிக்கு பொறையாறு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கிப் புறப்பட்ட பேருந்து பொறையார் ராஜீவ்புரம் என்ற இடத்தில் சென்றபோது பேருந்தின் இன்ஜினில் மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டு, திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட டிரைவர் பாதுகாப்பாக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தியிருக்கிறார். அவசர அவசரமாகப் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். இதனால் பேருந்தில் பயணித்த 20 பயணிகள் காயம் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பினர்.

பேருந்தில்  தீ விபத்து
பேருந்தில் தீ விபத்து

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக அமைச்சர் சந்திரபிரியங்கா, காரைக்கால் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து பொறையார் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

- ராகவன்

06 Aug 2021 9 AM

அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த ஜூலை 18-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 80.

மதுசூதனன்
மதுசூதனன்

அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சியின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் அஞசலி செலுத்தினர்.

முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சர் சேகர் பாபுவுடன் அஞ்சலி செலுத்த வந்தார். அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார் முதல்வர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு