Published:Updated:

Tamil News Today: நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி மனு! - தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

06-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

06 Sep 2021 12 PM

`நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி!’  

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி செப்டம்பர் 12-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் எனத் தெரிகிறது!

06 Sep 2021 12 PM

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை!

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திவருகிறது. மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது!

06 Sep 2021 12 PM

கடைகளில், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் கட்டாயம்!

தமிழகச் சட்டப்பேரவை
தமிழகச் சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடைகளில், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டுவர மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

06 Sep 2021 11 AM

`பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும்!’

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. முதல்வர் ஸ்டாலின் தினமும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவரும் நிலையில், பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். ஸ்டாலின், ``இந்தியா முழுவதும், சமூகநீதிக்கு அடித்தளம் இட்டவர் பெரியார். பெரியார் பேசிய பேச்சுகள், எழுதிய எழுத்துகள், பிறர் பேச, எழுதத் தயங்கியவை. அவர் நடத்திய போராட்டங்கள் குறித்துப் பேச வேண்டுமென்றால் அவையை 10 நாள்கள் ஒத்திவைத்துவிட்டுத்தான் பேச வேண்டும்” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பெரியார்
பெரியார்

`பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு தெரிவித்திருக்கிறது. பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், `` பா.ஜ.க., தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு