Published:Updated:

Tamil News Today: ஏரிகளின் நீர் இருப்பு விவரங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க முதல்வர் உத்தரவு

06-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

06 Nov 2021 9 PM

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் இருப்பு விவரங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்: முதல்வர் உத்தரவு

ஸ்டாலின்
ஸ்டாலின்

மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தாழ்வான பகுதியிலுள்ள குடியிருப்புகளைக் கண்காணிக்க வேண்டும் என்று வடகிழக்குப் பருவமழை தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

06 Nov 2021 9 PM

ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமனம்

Tamil News Today:  ஏரிகளின் நீர் இருப்பு விவரங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க முதல்வர் உத்தரவு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்: தமிழ்நாடு அரசு

06 Nov 2021 1 PM

தமிழகத்தில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இன்று முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் நகரக் கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது.

கனமழை
கனமழை

மேலும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைவதால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை முதல் குமரி வரை உள்ள 14 கடலோர மாவட்டங்களிலும் இடி, மின்னலுடனகூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

06 Nov 2021 11 AM

அமெரிக்காவில் கோவாக்ஸின்; அனுமதி கோரும் பாரத் பயோடெக்..!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் பாரத் பயோ-டெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்திருந்த நிலையில், அமெரிக்காவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசியைச் செலுத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று பாரத் பயோ-டெக் நிறுவனம், அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

06 Nov 2021 11 AM

அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... ராயப்பேட்டையில் இன்று தொடங்குகிறது..!

அ.ம.மு.க அலுவலகம்
அ.ம.மு.க அலுவலகம்

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று முதல் மூன்று நாள்கள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொள்கிறார். தொடர்ந்து, நாளையும், நாளை மறுநாளும் ஆலோசனை நடத்துகிறார்.அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

06 Nov 2021 11 AM

குடும்பத்துடன் இங்கிலாந்துக்குக் குடியேறுகிறாரா முகேஷ் அம்பானி?

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இங்கிலாந்தில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக இருந்த ஸ்டோக் பார்க் பங்களாவை ரூ.592 கோடிக்கு வாங்கியிருக்கிறார். அதனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முகேஷ் அம்பானி தன் குடும்பத்துடன் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு குடியேறவிருப்பதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், முகேஷ் அம்பானி இங்கிலாந்துக்குச் செல்லவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் ஆதாரமற்றது என ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு