Published:Updated:

Tamil News Today: செங்கல்பட்டு இரட்டைக் கொலை... 2 பேர் என்கவுன்ட்டர்!-நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தப்ப முயன்றதாகத் தகவல்

என்கவுன்ட்டர்
Live Update
என்கவுன்ட்டர்

07-01-2022 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

07 Jan 2022 9 AM

செங்கல்பட்டு இரட்டைக் கொலையில் தொடர்புடைய இரண்டு பேர் என்கவுன்ட்டர்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்ததால் செங்கல்பட்டு நகரமே பெரும் பரபரப்படைந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு இரட்டைக் கொலையில் தொடர்புடைய இருவர் காவல்துறையினரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு ரெளடிகள்மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

என்கவுன்ட்டர்
என்கவுன்ட்டர்

காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது தினேஷ், மொய்தீன் ஆகியோர் நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. என்கவுன்ட்டரில் பலியான தினேஷ், மொய்தீன் ஆகியோர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரெளடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க வெள்ளத்துரைக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.