Published:Updated:

Tamil News Today: உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு - 5 மாநில தேர்தல் அறிவிப்பு

5 மாநில தேர்தல் அறிவிப்பு
Live Update
5 மாநில தேர்தல் அறிவிப்பு

08-01-2022 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 Jan 2022 5 PM

5 மாநில தேர்தல் அறிவிப்பு

இந்தியாவில் உத்தரப்பிரதேம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்ரகண்ட் ஆகிய மாநிலங்களில், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

உத்தரப்பிரதேசம் - 403

உத்தரகாண்ட் - 70

பஞ்சாப் - 117

கோவா - 40

மணிப்பூர் - 60

ஐந்து மாநிலங்களுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

உத்தரப்பிரதேசம்:

ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

முதற்கட்ட தேர்தல் - பிப்ரவரி 10-ம் தேதி

ஏழாவது கட்ட(இறுதி) தேர்தல் - மார்ச் 7ம் தேதி நடைபெறும்.

உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா:

ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

மணிப்பூர்:

இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

முதற்கட்ட தேர்தல் - பிப்ரவரி 27-ம் தேதி

இரண்டாம் கட்ட தேர்தல் - மார்ச் 3-ம் தேதி நடைபெறும்.

தேர்தல் முடிவுகள்:

மார்ச் மாதம் 10- ம் தேதி ஐந்து மாநிலங்களுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா

08 Jan 2022 11 AM

`நீட் தேர்வு தீர்மானத்தில் உடன்பாடு இல்லை!’ - பா.ஜ.க

சென்னை தலைமைச் செயலகத்தில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக இன்று சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் காலை 10:30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, மதிமுக, தேமுதிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இந்த நிலையில் நீட்தேர்வு விலக்கு தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்று பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. கட்சியின் சார்பாகக் கலந்துகொண்ட எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ``சமூகநீதிக்கு எதிராக நீட் தேர்வு இருப்பதாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பான ஒன்று. நீட் தேர்வு தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்பதால் வெளிநடப்பு செய்தேன்” எனத் தெரிவித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
08 Jan 2022 10 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடங்கியது அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நீட் தேர்வு தொடர்பான சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, மதிமுக, தேமுதிக, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். திமுக சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொள்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததும், கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் நீட் விலக்கு எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. எனினும், இதுவரை இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது!

08 Jan 2022 8 AM

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. தமிழகத்தில் ஆரம்பம் முதலே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததும், கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் நீட் விலக்கு எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. எனினும், இதுவரை இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு குறித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சட்டமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை 8-ம் தேதி கூட்டி ஆலோசிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க உட்பட13 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.