Published:Updated:

Tamil News Today: ` பத்மப்ரியா, டாக்டர் மகேந்திரன் திமுக-வில் இணைந்தனர் !'

பத்மப்ரியா
பத்மப்ரியா

08-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 Jul 2021 6 PM

பத்மப்ரியா, டாக்டர் மகேந்திரன் திமுக-வில் இணைந்தனர்

மகேந்திரன்
மகேந்திரன்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் மற்றும் சூழலியலாளர் பத்மப்ரியா உள்ளிட்டோர் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர். டாக்டர் மகேந்திரன் கோவையில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் 1.4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மகேந்திரன் தோல்வியைத் தழுவினாலும், மூன்றாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்மப்ரியா கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

08 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 45,892 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,07,09,557 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 817. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,05,028-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,98,43,825 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,60,704 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 44,291 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 36,48,47,549 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இதில் நேற்று மட்டும் 33,81,671 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு