Published:Updated:

Tamil News Today: நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!

விபத்து
Live Update
விபத்து

08-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 Dec 2021 1 PM

நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ராணுவ உயரதிகாரிகளுடன் சூலூரிலிருந்து வெலிங்டனுக்குச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது அதிக மேகமூட்டமாக இருந்ததால் ஹெலிகாப்டர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
கோப்புப் படம்

ஹெலிகாப்டரில் ராணுவ உயரதிகாரி ஒருவர் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

08 Dec 2021 12 PM

`கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்!’

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுவிட்டாலும், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட தங்களின் மற்ற ஆறு கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தைத் தொடருவோம் என அறிவித்திருந்தனர் டெல்லியில் போராடும் விவசாயிகள். இந்த நிலையில் விவசாயிகள் இன்று சிங்கு எல்லையில் ஒன்றுகூடிப் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் வாபஸ் பெறுவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

போராட்டக்குழுவினர் மேல் தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறும் முன்பு, போராட்டத்தை ரத்து செய்வது நல்லது அல்ல என கருத்து தெரிவித்த விவசாய சங்க நிர்வாகிகள், வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
08 Dec 2021 8 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முடிவுக்கு வருகிறதா டெல்லி விவசாயிகள் போராட்டம்?!

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுவிட்டாலும், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட தங்களின் மற்ற ஆறு கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தைத் தொடருவோம் என அறிவித்திருந்தனர் டெல்லியில் போராடும் விவசாயிகள். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொடர்ந்து முயன்றுவருகிறது மத்திய அரசு. இதையடுத்து விவசாயிகள் இன்று மதியம் 2 மணிக்கு சிங்கு எல்லையில் ஒன்றுகூடிப் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவிருக்கின்றனர். அரசுடன் சுமுகநிலை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.