Published:Updated:

Tamil News Today: மேக்கேதாட்டு அணை விவகாரம்! - அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

மேக்கேதாட்டு
மேக்கேதாட்டு

09-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

09 Jul 2021 12 PM

மேக்கேதாட்டு அணை விவகாரம் - அனைத்துக்கட்சிக் கூட்டம் 

மேக்கேதாட்டு
மேக்கேதாட்டு

தமிழ்நாடு கர்நாடகா இடையே மேக்கேதாட்டு அணை பிரச்சனை மீண்டும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. மேக்கேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் மேக்கேதாட்டு அணை பிரச்னை தொடர்பாக விவாதிக்க வரும் 12-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். 12-ம் தேதி காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்துக் கட்சிகளின் கருத்தை தெரிந்துகொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

09 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,07,52,950 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 911. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,05,939 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,98,88,284 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,58,727 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 44,459 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 36,89,91,222 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இதில் நேற்று மட்டும் 40,23,173 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு