Published:Updated:

Tamil News Today: தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 2 மாநிலங்களவை எம்.பி பதவிக்குத் தேர்தல் தேதி அறிவிப்பு!

மாநிலங்களவை
மாநிலங்களவை

09-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Sep 2021 11 AM

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் இரண்டு மாநிலங்களவை எம்.பி பதவிக்குத் தேர்தல்!

`வெளிநாடுவாழ் தமிழர்களின் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை!’  - மாநிலங்களவை எம்.பி அப்துல்லா

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் இரண்டு மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஓர் இடத்துக்கு திமுக-வின் எம்.எம்.அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

09 Sep 2021 11 AM

`உலக கவனம் பெற்ற கீழடி நாகரிகம்!’ - முதல்வர் ஸ்டாலின்

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. கீழடி அகழாய்வு மூலம் சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்திருக்கிறது. கி.மு 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக் காசு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கீழடி நாகரிகம் கி.மு 6-ம் நூற்றாண்டுக்கு முந்தையது எனத் தெரியவருகிறது” என்றார்.

கீழடி தொல்லியல் ஆய்வுப்பணி
கீழடி தொல்லியல் ஆய்வுப்பணி

மேலும், நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

09 Sep 2021 9 AM

கடந்த அதிமுக ஆட்சியின் திட்டங்கள்! - வெள்ளை அறிக்கை?

தமிழகச் சட்டப்பேரவை
தமிழகச் சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு, அதன் தற்போதைய நிலை குறித்து இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு