Published:Updated:

Tamil News Today: தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்குப் பிரதமர் மோடி அஞ்சலி

மோடி
Live Update
மோடி

09-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Dec 2021 9 PM

டெல்லியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்குப் பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு ஆலோசகர்அஜித்தோவல் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்

மோடி
மோடி

மேலும் பிபின் ராவத் மகள்கள், மற்றும் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்

09 Dec 2021 3 PM

முடிவுக்கு வரும் விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக, அண்மையில் மத்திய அரசு அந்தச் சட்டங்களை திரும்பப் பெற்றது. அதற்கான மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் வருடக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் போராட்டத்தை இப்போதைக்கு தாங்கள் முடித்துக்கொள்வதாக விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள்மீது முன்னதாகப் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, விவசாயிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

நாளை மறுநாள் முதல் போராட்டக் களத்தில் இருக்கும் விவசாயிகள் அவரவர் ஊர்களுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ஜனவரி மாதம் அரசுடன் இது தொடர்பாக விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருப்பதாகவும், தகவல் வெளியாகியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
09 Dec 2021 1 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாதுகாப்புக்குச் சென்ற போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது!

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்தில் இன்று நடைபெற்றது. உயிரிழந்த 13 பேரின் உடல்கள் தேசியக்கொடி போர்த்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ ட்ரக்குகளில் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டன. அங்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் எனப் பலர் அஞ்சலி செலுத்தினர்.

போலீஸ் வாகனம் விபத்து
போலீஸ் வாகனம் விபத்து

தொடர்ந்து 13 பேரின் உடல்களும் அமரர் வாகனங்களில் கோவை சூலூருக்கு புறப்பட்டன. உடன் பாதுகாப்புக்காக போலீஸ் வாகனங்களும் அணிவகுத்தன. அப்போது நீலகிரி மாவட்டம், பர்லியாறு பகுதியில் போலீஸ் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீஸாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 13 பேரின் உடல்களுடன் பாதுகாப்புக்குச் சென்ற காவல்துறை வாகனம் விபத்துள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

09 Dec 2021 11 AM

பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!
பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வீர வணக்கம் செலுத்த மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 13 பேரின் உடல்கள் தேசியக்கொடி போர்த்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ ட்ரக்குகளில் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது. உயிரிழந்த ராணுவ முப்படை தளபதி உள்ளிட்டோரின் உடலுக்கு முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

09 Dec 2021 11 AM

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வீர வணக்கம்!

09 Dec 2021 10 AM

வெலிங்டனில் சதுக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடல்கள்!

Tamil News Today: தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்குப்  பிரதமர் மோடி அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வீர வணக்கம் செலுத்த மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 13 பேரின் உடல்கள் தேசியக்கொடி போர்த்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ ட்ரக்குகளில் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டன. உயிரிழந்த ராணுவ முப்படைத் தளபதி உள்ளிட்டோரின் உடலுக்கு முதல்வர், முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

09 Dec 2021 10 AM

கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டது!

கோவை மாவட்டம், சூலூர் விமான தளத்திலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டனுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் தமிழக தடயவியல்துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

இதற்கிடையே விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

09 Dec 2021 9 AM

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்படி?

குன்னூர் வெலிங்டனிலிருந்து நேரலை...

09 Dec 2021 9 AM

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - விமானப்படை தளபதி நேரில் ஆய்வு! 

கோவை மாவட்டம், சூலூர் விமான தளத்திலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டனுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக இந்திய விமானப் படையின் தளபதி மார்ஷல் வி.ஆர்.சௌதாரி தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் தங்கியிருக்கிறார். விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் தற்போது அவர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார் அவர். அவருடன் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவும் உடன் இருக்கிறார்.