Published:Updated:

Tamil News Today: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை தி.மு.க-வில் இணைகிறார்!

தோப்பு வெங்கடாசலம்
தோப்பு வெங்கடாசலம்

10-07-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

10 Jul 2021 12 PM

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை தி.மு.க-வில் இணைகிறார்!

தோப்பு வெங்கடாசலம்
தோப்பு வெங்கடாசலம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை தி.மு.க-வில் இணைகிறார். அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 300 பேருடன் நாளை காலை 10:30 மணிக்கு இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ம.நீ.ம-லிருந்து விலகிய மகேந்திரன் உள்ளிட்ட பலர் சென்னையில் அண்மையில் தி.மு.க-வில் இணைந்த நிலையில் தோப்பு வெங்கடாசலமும் தனது ஆதரவாளர்களுடன் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

10 Jul 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 42,766 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,07,95,716 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,206. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,07,145-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,99,33,538 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,55,033 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 45,254 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு