Published:Updated:

பிபின் ராவத் உடல் 17 சுற்று குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்!

தகனம்
Live Update
தகனம்

10-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் நிகழ்வு..!

10 Dec 2021 5 PM

பிபின் ராவத் உடல் 17 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ஆகியோரின் உடல்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். ராவத்தின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அவரின் மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தகனம்
தகனம்
இறுதி மரியாதை
இறுதி மரியாதை

பின்னர், இருவரின் உடல்களும் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு, இருவரின் உடல்களும் ஒரே தகன மேடையில் வைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, 17 சுற்று குண்டுகள் முழங்க 800 ராணுவ வீரர்களின் மரியாதையுடன் இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டன.

10 Dec 2021 4 PM

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு இறுதி மரியாதை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ஆகியோரின் பூத உடல்களுக்கு டெல்லி கன்டோன்மெண்ட் பகுதியில், முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் இறுதி மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இறுதி மரியாதை
இறுதி மரியாதை
இறுதி மரியாதை
இறுதி மரியாதை
இறுதி மரியாதை
இறுதி மரியாதை

பிபின் ராவத்தின் மகள்கள், தங்கள் பெற்றோரின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்தனர். இன்னும் சற்று நேரத்தில், முழு அரசு மரியாதையுடன் இருவரின் உடல்களும் தகனம் செய்யப்படவிருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
10 Dec 2021 2 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம்
பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம்
ANI

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் டெல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி ஆகியோரின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவர்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. வழிநெடுகிலும் மக்கள் கூடி நின்று மலர் தூவி மரியாதை செய்கிறார்கள். இறுதிப் பயணத்தில் கலந்துகொண்டவர்கள், கையில் தேசியக்கொடி ஏந்திப் பங்கேற்றுள்ளனர். இன்று மாலை 4 மணி அளவில் பிபின் ராவத்டின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

10 Dec 2021 1 PM

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை..!

ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்திருக்கிறது.

10 Dec 2021 1 PM

ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்குத் தலைவர்கள் அஞ்சலி!

பிபின் ராவத் உடல் 17 சுற்று குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்!
10 Dec 2021 10 AM

ஹெலிகாப்டர் விபத்து... ராணுவ அதிகாரிக்கு இறுதிச்சடங்கு!

முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரி லிட்டர் உட்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படைப் தளத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம்ம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ மையத்துக்குப் புறப்பட்டனர். ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கி நொறுங்கியதில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிகள்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிகள்

பலத்த காயமடைந்த ஓர் அதிகாரிக்கு மட்டும் பெங்களூரில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்ட வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேற்று கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டன. அதைத் தொடர்ந்து பிபின் ராவத் உள்ளிட்டவர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

இன்று பலியான ராணுவ வீரர்களின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று மாலை 4 மணிக்கு இறுதி மரியாதை செய்யப்படவுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி பிரிகேடியர் லிட்டருக்கு இறுதி சடங்குகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. ஹரியானா முதல்வர் இறுதி மரியாதை செலுத்தினார்!