Published:Updated:

Tamil News Today: அதிகரித்து வரும் கொரோனா... இன்று மாலை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

ஸ்டாலின், மோடி
Live Update
ஸ்டாலின், மோடி

11-01-2022 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

11 Jan 2022 10 AM

இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,063 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இது நேற்றைய பாதிப்பு அளவை ஒப்பிட்டால், சிறய அளவில் குறைந்திருக்கிறது. நேற்று இந்தியாவில் 1,79,723 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

இந்தியாவில் தற்போது 8,21,446 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 69,959 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணிக்கு இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகி்றார்.