Published:Updated:

Tamil News Today: `பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்!’ - உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

11-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

11 Aug 2021 12 PM

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு:

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. சிறந்த நகராட்சிப் பட்டியலில் உதகைக்கு முதலிடம், திருச்செங்கோடும் சின்னமனூரும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான விருதுகளை வழங்குவார்.

சிறந்த பேரூராட்சிகள் பட்டியலில் திருச்சி மாவட்டத்தின் கல்லக்குடி முதலிடத்தையும், கடலூரின் மேல்பட்டாம்பாக்கம் 2-ம் இடத்தையும், சிவகங்கையின் கோட்டையூர் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

சிறந்த மாநகராட்சிக்கு ₹25 லட்சமும், முதல் 3 இடங்களை பிடித்த நகராட்சிகளுக்கு முறையே ₹15 லட்சம், ₹10 லட்சம், ₹5 லட்சமும், முதல் 3 இடங்களை பிடித்த பேரூராட்சிகளுக்கு முறையே ₹10 லட்சம், ₹5 லட்சம், ₹3 லட்சமும் பரிசாக முதலமைச்சரால் வழங்கப்படும்.

11 Aug 2021 11 AM

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கை ஆறு மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தினசரி விசாரணை அடிப்படையில் விரைந்து முடிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது!

11 Aug 2021 11 AM

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழா!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

``ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

11 Aug 2021 11 AM

`அரசியல் காழ்ப்புணர்ச்சி; திமுக அரசின் பழி வாங்கும் நடவடிக்கை!’ - 

கோவை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான மற்றும் அவருக்கு நெருக்கமான சுமார் 60 இடங்களில் சோதனை நடைபெற்றது. மற்ற இடங்களில் 7 மணிக்கு முடிந்த சோதனை, கே.சி.பி நிறுவன அலுவலகத்தில் மட்டும் இரவு 12:30 மணி வரை நடந்திருக்கிறது. அடுக்குமாடிக் கட்டடத்தில் மூன்று தளங்களில் கே.சி.பி நிறுவனம் அமைந்துள்ளது. இந்தநிலையில், இன்று இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்றுவருவது பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ``அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின்போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கும், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

11 Aug 2021 10 AM

கோவை கே.சி.பி நிறுவனத்தில் 2-ம் நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை!

கே.சி.பி
கே.சி.பி

கோவை பீளமேடு பகுதியிலுள்ள கே.சி.பி நிறுவனத்தில் 2-ம் நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்திவருகின்றனர்.

நேற்று கோவை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான, அவருக்கு நெருக்கமான சுமார் 60 இடங்களில் சோதனை நடைபெற்றது. மற்ற இடங்களில் 7 மணிக்கு முடிந்த சோதனை, கே.சி.பி நிறுவன அலுவலகத்தில் மட்டும் இரவு 12:30 மணி வரை நடந்துள்ளது. அடுக்குமாடிக் கட்டடத்தில் மூன்று தளங்களில் கே.சி.பி நிறுவனம் அமைந்துள்ளது. இந்தநிலையில், இன்று இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்றுவருவது பரபரப்பை ஏற்படுதியுள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு