Published:Updated:

Tamil News Today: தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள்; காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

மோடி
Live Update
மோடி

12-01-2022 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

12 Jan 2022 4 PM

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள்; காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார் மோடி. விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல், திருவாரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைத்தார்.

மோடி
மோடி
உ.பாண்டி
ராமநாதபுரம் மருத்துவமனை
ராமநாதபுரம் மருத்துவமனை
உ.பாண்டி

அதைத் தொடர்ந்து, தமிழில், `தை பிறந்தால் வழி பிறக்கும்!' என்ற வாசகத்துடன் பேசத் தொடங்கிய மோடி தற்போது உரையாற்றிவருகிறார்...

12 Jan 2022 1 PM

ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்!

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 3 கோடி மோசடி வழக்கில் கைதான முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
representational image

``ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்” எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் அளித்து இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறாகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
12 Jan 2022 11 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`மாநிலத்தில் ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்துங்கள்!’

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் இன்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை
ஆக்சிஜன் பற்றாக்குறை

அதில், ``மாநிலத்தில் ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 48 மணி நேரத்துக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். திரவநிலை மருத்துவ ஆக்சிஜனைத் தங்கு தடையின்றி எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

12 Jan 2022 9 AM

11 புதிய மருத்துவக் கல்லூரிகள் - பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார்!

தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டுவருகிறது. அந்த வகையில், புதிதாக 11 மாவட்டங்களில் தொடங்க முடிவுசெய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. அதன்படி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக மொத்தம் ரூ.4,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.2,145 கோடி. மொத்தமுள்ள 11 கல்லூரிகளையும் சேர்த்து 1,450 மாணவர்கள் கூடுதலாக மருத்துவக் கல்வி படிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

மோடி
மோடி

இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தமிழகம் வந்து தொடங்கிவைப்பார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா பரவல் அதிரடியாக உயர்ந்துவரும் நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் வருகை திடீரென ரத்துசெய்யப்பட்டது.